பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

தால் அவ்விலக்கியம் உடையார்க்குப் புகழ் உண்டாகாது ; மாறாகப் பழியே உண்டாம். அத்தகைய இலக்கிய நூல்களைப் பெற்றதால், பெற்ற பழியினும், பெருமையால் பெறும் புகழே பெரிதாம். ஆகவே, இலக்கிய இயல்புணர்ந்தார், இலக்கிய நூல்கள் எண்ணற்றனவாதல் வேண்டும் என எண்ணார் ; அவை, இயல்பால் சிறந்தனவாதல் வேண்டும் என்றே எண்ணுவர். இயல்பால் சிறந்தனவாதலோடு எண்ணாலும் சிறந்ததாயின் நனிமிக நன்று; பொன்மலர் நாற்றம் உடைத்து' எனப் போற்றிப் புகழப் பெறும்.

புல்லிதழ் பூவிற்கும் உண்டு என்ப. முழுதும் குற்றமே நிறைந்தவரோ, முழுதும் குணமே நிறைந்தவரோ . உலகில் ஒருவரும் இலர். குற்றமும் குணமும் ஒருங்கே உடையவர் மக்கள். தனி மனிதன் இயல்பே இதுவாயின், பல்வேறு மனப் பண்பு கொண்ட மக்கள் பலர் கூடி வாழும் மக்கட் சமுதாயத்தில், முழுதும் குற்றத்தையோ, முழுதும் குணத்தையோ எதிர்பார்த்தல் இயலாது. குற்றத்தை அடுத்துக் குணமும், குணத்தை அடுத்துக் குற்றமும் கலந்தே காணப்படும், ஆதலினன்றோ, ' “குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” என்றார், வள்ளுவனர். உலகின் இயல்பு இது.

இத்தகைய உலகியலை அடிப்படையாகக்கொண்டு இலக்கியம் ஆக்குவார். உயர்ந்த பண்பாடுடையவராவர். உயர்ந்த பண்பாடுடையவர், உலகில் யாண்டும் குணத்தையே காண்பர் எவ்வுயிரிடத்தும் குணத்தையே காண்பர். "குற்றம் அவர் கண்களுக்குப் புலனாகா; அத்தகையார்