1 11
படிப்பார்க்குப் பேரின்பம் ஊட்டும் வகையில், இலக்கியச் சுவை சொட்டச் சொட்ட எழுந்த சிறந்த நாடக இலக்கியம், மனேன்மணிய நாடகம் ஒன்றே
எனத் துணிந்து கூறலாம்.
' வ&ளயும்வேய் கி.மிரும் : வளையா நெடுமரம்
.கிளையுடன் கெடுமே கிளர்காற்ற தனில் , முளையும் ஒர் மரமோ ? முனிவ ! புல்லினம் களைகுவர் : களைகிலர் காழ்பெரும் தருக்கள் : சேணுயர் தேக்கு திசையெறி குறையில் ஆணிவேருடனெழுந்து அதிர்ந்து அசைந்து இறினும், பேணுவர் அதனைப் பெரியோர் ! யாரே காணுவர் காழறு நாணம்இல் நாணலை : ஒர் உயிர்ப்பேனும் உண்டேல், அடிகாள் : போரிடைப் போக்குவன் ; புகழ் எனக்கு அதுவே.'
இது போலும் இனிப்பூட்டும் பகுதிகள் பல கொண்டு, படிப்பார்க்குப் பழந்தமிழ் இலக்கியப் பண் பாட்டின கினப்பூட்டும் பண்பு வாய்ந்த இந்நூல் காடக இலக்கியங்களுள் மட்டும் சிறந்ததன்று இக் காலத்தே தோன்றிய ஏனைய இயற்றமிழ் இலக்கியங் களிலும் சிறந்தது அதுவே.