பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 1 7

தோடு, உணர்ச்சியூட்டும் கதை எழுதும் வழக்கம் இக் தாலே, தக்லதுாக்கி, கிற்கிறது. தமிழ் நாட்டில் வெளி யாகும் கிழமை இதழ்களும், திங்கள் இதழ்களும், தனி" நூல்கள் பலவும் இப் பணியையே தலைமேற் கொண்டுள்ளன. அதல்ை தமிழ் உரை நடை பெரும் அளவு வளர்ந்துளது என்பது உண்மையேயென்றலும், அவற்றுள் இலக்கிய மரபு கெடாவாறு, தமிழ் மொழிப் பண்பு தழுவ எழுதப் பெற்ற நூல்கள் ஒரு சிலவற்றையேனும் காணல் அரிதினும் அரிதாக உளது: இலக்கிய அறிவு அற்ற வரைப் பலராகவும், அது பெற்றவரைச் சிலராகவும் கொண்டே தமிழ் நாடு இன்றும் காட்சி அளிக்கிறது: ஆகவே, அங்காட்டில் பிறந்து, அந்நாட்டு மக்கள் மனம் மகிழும் வண்ணம் கதை எழுதத் தொடங்கியவர்கள்: மிகப் பலராய அப் பண்பறியா மக்களின், உணர்ச்சி களுக்கும், உரைகளுக்குமே, தம் கதைகளில் முதலிடம் தந்துவிட்டனர். அதனல், அவர் எழுதிய உரை நடை கள் இலக்கிய மரபினை இழந்துவிட்டன. எழுதும் இலக்கியம், மக்கள் பண்பாட்டை வளர்க்கத் துணை புரிவதாதல் வேண்டும் : அம்மக்களின் பண்பாட்டின. எடுத்துக் கூறுவனவாதல் கூடாது. இலக்கியம், மக் களுக்கு உண்மை மொழியை, உயர்ந்த மொழியை ஊட்டுதல் வேண்டும் அம்மக்கள் வழங்கும் மொழியைத் தான்் மேற்கொண்டு விடுதல் கூடாது. இந்த மரபிக்னப் o புலவர் பெருமக்கள் பொன்னேபோல் போற்றி வந்தமையாலன்ருே, தமிழ்மொழி, ஆரியர் மொழிக்கும். அவரை அடுத்து வந்த மகமதியர் மொழிக்கும் ஆங்கிலேயர் மொழிக்கும். இன்று வந்துபுகும் இந்தி