பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 18

மொழிக்கும் அடிபணிந்து அழிந்து போகாது, இன் 'றும் உரங் கொண்டு, உயர்ந்து விளங்குகிறது. சிறு கதையும், தொடர் கதையும் எழுதும் ஆசிரியர்கள் அம்மொழி மரபு அறிந்து, தமிழின் உரை நடைச் செல் வத்தை வளர்ப்பார்களாக அத்துறையில் புகுந்து பணியாற்றும் தமிழ்ப் பேரறிஞர்கள், அவர்கள் வழி :யில் தாமும் சென்று தவறிவிடாது, அவரைத் தம் நெறிக்கு-தமிழ் நெறிக்கு அழைத்துத் துணை புரிவார்

களாக நிற்க. .

தமிழ் நாட்டில், தமிழ் இலக்கிய உணர்வும், தனித், தமிழ் ஆர்வமும், என்றும் இல்லா அளவு, இன்று வளர்ந்துள்ளன. அதன் விளேவாய்ச் செய்யுள்களும், நாடகங்களும், உரை நடைகளும் செந்தமிழ் நடையில் தோன்றத் தொடங்கியுள்ளன. - ; , " தாய் எழில்தமிழை, என்றன் தமிழரின் கவிதைதன்னை ஆயிரம் மொழியில்காண இப்புவி அவாவிற்று என்ற ੋ: தோயுறும் மதுவின்ஆறு தொடர்ந்து என்றன்செவியில் ་ བ ”་ ་ ་ བ ་ ་ ་ ་ ་ ་ ་ ་ ་ བ ་ ་ ་ ལ ་ལ ས ་ པ ... ... ། པ ་ ་ ་ w - வந்து பாயும்நாள் எந்தநாளோ ? ஆரிதைப் பகர்வார் இே என்ற புலவரின் வேட்கை நிறைவேறத் தொடங்கி விட்டது. பல மொழி இலக்கியங்கள். தமிழாக்கப்

பட்டுத் தமிழிலக்கியம் ஒருபால் வளரத் தொடங்கிவிட்டது : தலே சிறந்த தமிழ் நூல்கள் பல்வேறு மொழிகளில் எழுதப் பெற்று, உலக மக்களின் பாராட்டு தலைப் பெறத் தொடங்கி விட்டன. ஒருபால். இன்று தோன்றிய இவ்விலக்கிய ஆர்வம் இறவாது வளர்க !

வாழ்க அவ்விலக்கிய வளர்ச்சியாளர்கள் !