பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6

என்றும், நச்சினர்க்கினியர், “எவ்விடத்தும், எக்காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துரை வகையாற் கூறும் நாடக இலக்கணம் போல யாதானும் ஒரோவழி ஒரு சாரர் மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமும் காலமும் நியமித்துச் செய்யுட் செய்தல்” என்றும் கூறுவது அறிக.

சங்க காலத்தும், அதற்கு முற்பட்ட காலத்தும், பல்லாற்றானும் சிறந்தாராப் வாழ்ந்தார் பலரிருப்பவும், அவர் வரலாற்றினைப் பெயர் கூறிப் பாடாமைக்குக் காரணம், “அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால், இன்மை அரிதே வெளிறு,” என்ற நியதிப்படி, அவர் மாட்டும் சில குறைபாடுகள் உளவாம். குறைபாடு உடையான் ஒருவனைத் தலைவனாக்கி இலக்கியம் இயற்றின், அவ்விலக்கியத்தைக் கற்பாருள் சிலர், அவன் மாட்டுக் காணலாம் தவறு கண்டு அவ்விலக்கியத்தையே பழிப்பர்: வேறு சிலர் புலவரால் பாராட்டப்பெறும் அத்தலைவன்பால் காணலாம் அத்தவறு தவறன்று: அது தவறாயின், அவனைப் புலவர் பாராட்டியிரார் ; புலவர் பாராட்டியுள்ளனர் ; ஆகவே அது தவறன்று. ஆதலின், அதனை யாம் மேற்கொள்வதிலும் தவறில்லை எனக் கொண்டு தவறு புரிதலும் செய்வர் என்ற இவ்விரு பேரச்சம் காரணமாகவே பழந்தமிழ் இலக்கியங்கள் பெயர் கூறிப் பாராட்டவில்லை. பாராட்டவில்லை என்பது மட்டுமன்று மக்கள் ஒழுகலாற்றிற்கு உயர்ந்த வழிகாட்டியாக வரும் அகத்துறைப் பாடல்களில், ஒருவர்க்குரிய வரலாற்றினை விதந்து கூறுவது