பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

கள். எல்லா மக்களுக்கும், எந்நாட்டு மக்களுக்கும், எங்நிலை மக்களுக்கும் ஏற்புடைத்தாகும். அவ்வாறு, அப்பொதுப் பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியங்களே என்றும், எங்கும் இறவாது நிலைத்து வாழும். அவ்வாறின்றி, அவ்வக்கால மக்களின், அந்த அந்த நாட்டு மக்களின், ஆசாபாசங்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல்கள் இலக்கியங்களாகா , அவை தோன்றிய அந்தக் காலத்தில் அந்த நாட்டில், அவை தோன்றுவதற்குக் காரணமாகிய சூழ்நிலை மாறியவுடனே அவை அழிந்துபோம். தமிழில், இலக்கியங்கள் என்று இன்றும் போற்றப்படும் சங்க நூல்கள். அவ்வாறு எழுந்தன ஆகா. மக்களின் பொதுப் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு எழுந்தன ஆதலின், அவை இக்காலத்தவராலும், எந்நாட்டு மக்களாலும் போற்றப்படுகின்றன.

"ஆரணம்காண் என்பர் அந்தணர் : யோகியர் ஆகமத்தின்
காரணம்காண் என்பர் : காமுகர் காமநன்னூலது என்பர்;
ஏரணம்காண் என்பர்எண்ணர் எழுத்து என்பர் இன்புல - வோர்;
சீரணங்காய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே ”

எனப் பாராட்டுமாறு, பல்சுவை உடையார்க்கும் விருந்தளிக்கும் பண்புடைய திருக்கோவையார் போல், எக்கால மக்கட்கும், எந்நாட்டு மக்கட்கும், எந்நிலை மக்கட்கும் இன்பம் ஊட்டும் உயர்ந்த பண்பாடுகொண்டு தோன்றுவதே உண்மை இலக்கியமாம்.

மக்கள் தங்கள் ஆசாபாசங்களுக்கு ஆக்கம் தரும் பொருள்களிடத்து மட்டுமே ஆர்வம் காட்டுவர். தங்கள்