பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

கண்ட வண்டி ஒட்டி, வண்டியில் வருவாருள் யாரேனும், அங்கு இறங்குகின்றனரா? வண்டியை நிறுத்த வேண்டுமா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார். ஆனால், அவர் அதை வாய் திறந்து கேட்பதில்லை. வண்டியை ஒட்டிக் கொண்டே மின்னூது குழலினின்றும் ஒருமுறை ஒலி எழுப்பிக் காட்டுகிறார்; அது கேட்ட ஊர்தித் துணைவர், அவர் கருத்தறிந்துகொண்டு, ஓட்டியின் அண்மையில் -மணியும், தன்பால் விசையும் பொருந்த பொறுத்தப் பெற்றிருக்கும் மின்வழி மணியை, வண்டியை நிறுத்த வேண்டின் சிறிது நாழிகையளவு நீள ஒரு முறையும், நிறுத்தாமை வேண்டின், விட்டு விட்டு விரைந்து இரு முறையும் அழுத்தி ஒலி எழுப்புவர். அது கேட்ட வண்டி ஓட்டியும், அதற்கேற்ப நிறுத்தியும் நிறுத்தாதும் ஓட்டிச் செல்வர். உள்ளக் கருத்தினை உணர்த்துவதும் உணர்வதும் ஈண்டும் நிகழ்ந்தன. ஆயினும், உலகோர், இம்முறையினை மொழி என ஏற்றுக் கொள்ளார். இவ்வாறே, உணர்த்தும் வகையும், உணரும் வகையும் பலவாம். அவையெல்லாம் மொழிகளாகா.

உள்ளக் கருத்துக்களை உணர்த்தவும் உணரவும் உடலுறுப்புக்களின் சைகைகளையும், விலங்கும் பறவையும் எழுப்பும் ஒலிகள் போல் ஒலிப்பதையும், வெறுப்பும், வெகுளியும், இன்பமும், துன்பமும் ஆய உணர்ச்சி வயப்பட்டவழி, இயல்பாக எழும் ஒலிகளையும் உற்ற துணைகளாகக்கொண்ட பண்டைய மக்கள், நாள் ஆக ஆக, அவையெல்லாம் குறைபாடுடையவாகக் கண்டு, தம் வாயினின்றும் எழுந்து, குழந்தைகள் மழலைபோல், பண்டு பொருள் குறியாது ஒலித்துக்கொண்டிருந்த