பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



15


ஒலிகளுக்குச் சிறிது சிறிதாகப் பொருளேற்றி மேற்கொண்டனர். அதனல் கருத்தை உணரவும், உணர்த்தவும், பல்வேறு ஒலிகளான் ஆய சொற்களை ஆள்வதே மொழியாம் என்ற முடிந்த நிலைபிறந்தது.

ஒருவர் உள்ளத்தில் உள்ளதனை ஒருவர்க்கு உணர்த்தவும், ஒருவர் உள்ளத்தில் உள்ளதனை ஒருவர் உணரவும் உறுதுணைபுரிந்த சொற்களின் கோவையே மொழியாம் எனினும், அம்மொழி இன்று காணப்படுவதேபோல், அது தோன்றிய அந்தக் காலத்தில் காணப்படவில்லை. அடிப்படைத் தத்துவம் என்றும் ஒன்றேயாம்; ஆனால், அதன் அமைப்பும் முறையும் என்றும் ஒரு தன்மையவாகா.

உடற் பசியைப் போக்க உதவுவது உணவு; உணவின் அடிப்படைத் தத்துவம் இதுவே ஆனால், காட்டு வாழ்வினராய பண்டைய மக்கள். அக்காட்டிற் கிடைத்த காயையும், கனியையும், கிழங்கையும், கீரையையும், காட்டு உயிர்களின் ஊனையும் உண்டு பசியொழிந்து வாழ்ந்தனர். வயிற்றுப் பசியைப் போக்க உதவுவதே உணவு. ஆகவே, அதைப் போக்க உதவும் எதையும் உண்ணலாம் என்று எண்ணி, இன்றைய நாகரிக மக்கள், காட்டு மக்கள் உண்ட அக் காய், கனி, கிழங்கு, கீரைகளையும், காட்டு உயிர்களின் ஊனையும் அவ்வாறே உண்ண விரும்புவதிலர். மாறாக, அம்மக்கள், இன்று உணவாக விரும்புவது, அறுசுவை கூடிய உணவினை உண்பன, அக் காய் கனி முதலாயினவேயாயினும், அவற்றிற்கு ஆறுசவைகளையும் ஊட்டி, உண்பதையே விரும்புகின்றனர்: ஒரு சுவை குறையினும் உண்ண மறுக்கின்றனர். "இதன் விளைவால் பண்டு