பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

தாம் செல்லக் கருதிய இடங்களுக்கு, இடைவழியில் உள்ள காடு, மலை, வனம், வனாந்தரங்களைக் காலால் நடந்தும், ஆற்றையும், கடலையும் நீந்தியும் கடந்து சென்ற மக்கள், கட்டை வண்டிகளையும், கட்டு மரங்களையும், மாடும், குதிரையும் பூண்ட வண்டிகளையும், பாய் விரித்த மரக் கப்பல்களையும், நீராவி துணை செய்ய, நில எல்லைகளை நினைத்த அளவில் கடக்கும் நீண்ட வண்டித் தொடர்களையும், நீரைப் பிளந்து செல்லும், நாவாய்களையும் மேற்கொள்ள நாணி, நிலத்தையும் நீரையும் ஒருங்கே கடக்கவல்ல வானவூர்திகளே வழித்துணையாகக்கொண்டு வாழத் தொடங்கியுள்ளனர்.

நாகரிகம் வளர வளர, நாட்டு மக்கள் அறிவு பெருகப் பெருக, அவர்கள் உண்ட உணவு, அணிந்த ஆடை, குடித்த நீர், இருந்த உறையுள், ஊர் செல்ல உதவிய ஊர்தி முதலாயின எல்லாம் பண்டிருந்த பழி நிலையின் நீங்கிப் பாராட்டத்தக்க புதிய நிலையினைப் பெற்றுவிடும் பெற்றுவிட்டன. 

பண்டு நாகரிகம் அற்றுக் காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த மக்களிடையேயும், ஒருவர் உள்ளத்தை ஒருவர் உணர உறுதுணைபுரியும் மொழி இடம் பெற்றிருந்தது. ஆனால், அம்மொழியை அன்றிருந்தவாறே இன்றும் ஆள, அம்மக்கள் மறுக்கின்றனர். காட்டு மக்கள் வழங்கிய அம்மொழியை, இன்று விரும்புவார் எவரும் இலர். உணவிலும், உடையிலும், உறையுளிலும், ஊர்தியிலும், மக்கள்

2
2