பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

உணர்த்தும் உயர்ந்த கருவியாம். “நயன் இலன் என்பது: சொல்லும் பயனில பாரித்துரைக்கும் உரை”, “அறம், சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் புன்மையால் காணப்படும்” என்ற வள்ளுவர் வாக்குகள் பயனில், சொல் கூறுவான் நெஞ்சம் நயனிலதாகும்; புறங் கூறும் , புல்லியோன் உள்ளம், அறன் அறியா மறவுள்ளமாம் என்ற உண்மைகளே உணர்த்திச் சொல்லும் செயலும் நல்லனவாக், கொண்டவர் உள்ளமும் நன்றாம்; ஆகவே, உள்ளமும், உரையும், உற்ற தொழிலும் ஒன்றோடொன்று உறவுடையன: ஒன்று நன்றாயின், ஏனைய இரண்டும் நன்றாம் : ஒன்று தீதாயின், ஏனைய இரண்டும் தீதாம். ஆகவே, உயர்ந்த மொழியும், சிறந்த இலக்கியங்களும், உயர்வும் சிறப்பும் ஒருங்குடையாரிடத்து மட்டுமே உளவாம் என்ற உண்மைகளே உறுதி செய்கின்றனர்.கரும்பு தோன்றுவது கழனியில்! களர் நிலத்தில் அன்று!

செந்தமிழ் மொழி சிறந்த இலக்கியங்களையும், அவ்விலக்கியங்களின் பண்பினை இனிதெடுத்துரைக்கும் இலக்கணங்களையும் பெற்றுளது. “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்” என்பது விதி. இலக்கியம் முற்பட்டது: இலக்கணம் பிற்பட்டது. நாய் என்ற பொருளைக் கண்ட ஒருவனே, நாய் என்பது யாது என்பதை அறிந்து கூற முடியும். அதை அறியாத ஒருவன் அப்பொருள் பற்றிக் கூறுதல் பொருந்தாது: பொருந்தாது என்பது மட்டுமன்று:அது அவனால் இயலவும் இயலாது. மேலும் நாய் என்ற பொருளே இல்லாதவிடத்து. அப்பொருள் பற்றிப் பேசு-