பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஆண்மைகளை உணர்த்தும் என்றும், “பிடி என் பெண் பெயர் யானை மேற்று” எனப் பெண்மை உணர்த்தும் பெயர்களுள் இன்ன பெயர், இன்னின்ன உயிர்களின் பெண்மைகளே உணர்த்தும் என்றும், பொருள்களுக்கும், சொற்களுக்கும். உள்ள தொடர்பினை உணர்ந்து வரையறுத்து வழங்கியுளது தொல்காப்பியம்.

அம்மட்டோ ! மலை, காடு, வயல், கடல் என நால் வகைப்படும் நிலத்தின் இயல்பையும்,ஞாயிற்றின் வெங்கதிர், வானின் தண்பெயல் என்ற இவற்றின் இயல்புகளுக்கு ஏற்ப, கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் எனப் பிரிவுண்டு நிற்கும் காலத்தின் இயல்பையும், அவ்வந் நிலங்களில் அவ்வக் காலங்களில் பூத்துக் காய்த்தும். பயன் தரும் மரம் செடி கொடிகள், நிலத்தில் ஊர்ந்தும் தவழ்ந்தும், ஓடியும், கடந்தும், நீரில் நீந்தியும், வானத்தில் பறந்தும், வாழும் பல்வேறு உயிர் வகைகளையும், அவ்வுயிர்களின் உணவு, உறையுள் ஒழுக்கம் ஆகியவற்றின் இயல்புகளையும், அவ்வுயிர்களுள் ஆறறிவு படைத்த மக்கள், மனந்து. மக்களைப் பெற்று மனயறம் காக்கும் மாண்புடையதாய அகவொழுக்கத்தினையும், ஊராரும், உலகோரும் ஒன்றுகூடி, அவ்வக வாழ்வு அமைதி நிறைந்த நல்வாழ்வு ஆதற்கு, நற்றுணையாம் பொருளிட்டு முயற்சிகளையும், அம்முயற்சி இனிது நடைபெற நின்று துணைபுரியும் அரசியற் சிறப்புக்களையும், அவ்வரசியலை அறம் பிறழாது காக்கும் அரசர்கள். மேற்கொள்ளும் போர் நிகழ்ச்சிகளையும் உணர்த்தும் புற ஒழுக்கத்திகனயும் இனிது எடுத்துக் கூறியுள்ளது.