பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இலக்கியம் எழுந்த வரலாறு இஃது.--ஆகவே, இலக்கியத்தைக் காணின்,அவ்விலக்கியத்தில், அவ்விலக்கியத்திற்குரிய மக்களைக் காணலாம். மக்களைக் காணின், அம்மக்களிடையே அம்மக்களின் இலக்கியங்களைக் கானலாம், அதனால் மக்கள் வளர வளர இலக்கியமும் வளரும்: அவர் வளம் குன்றக் குன்ற அவர் இலக்கியமும் வளங் குன்றித் தோன்றும் என்பது உறுதி. மக்களுக்கும், இலக்கியங்களுக்கும் உள்ள இவ்வுறவினை உட்கொண்டு தமிழ் இலக்கியங்களின் இயல்பினை ஆராய்தல் வேண்டும்.

மக்கள் வாழ்க்கை வனப்புடையதாய், வழுவற்றதாய் வாய்ப்பு பல நிறைந்ததாய் அமைதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆகும்: மக்கள் வாழ்க்கையைப் பார்த்துப் பாராட்டி எழுந்தது இலக்கியம்: இலக்கியம் பல கண்டு எழுந்தது இலக்கணம். தமிழ், தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று விட்டது. அத்தொல்காப்பியம், தனக்கு முன்இருந்த பல பல இலக்கண நூல்களைக் கொண்டு எழுதப் பெற்ற வழி நூலாம்: அவ்வாறு எழுந்த அத்தொல்காப்பியம் கூறும் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும், வாழ்க்கை இலக்கணமும், இன்றைய நிலையிலும் குறை காணாவாறு அமைந்துள்ளன . அவ்வாறு அது அமைதற்கேற்ப தமிழ் இலக்கியங்கள், அது தோன்றுவதற்கு முன்னரே, சிறந்த இடத்தைப் பெற்று விட்டன என்பன இதுகாறும் கூறப் பெற்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியம் தோன்றியிருக்குமாயின் அது தோன்றுவதற்குக்