பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

இவை பொருளாகவே தோன்றியுள்ளன. அவற்றுள் ஒரு சில:

ஒர் ஆண் மகன், ஒரு பெண்ணின் பால் காதல் கொண்டான். அவளும் அவன்பால் அன்பு செலுத்தினாள். இருவரிடையே தோன்றிய அவ்வன்பு, நாள்தோறும் வளர்ந்தது. ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்று எண்ணுமளவு அது வளர்ந்துவிட்டது. ஆனால், அவர்கள் தங்கள் காதலுறவினைத் தம் பெற்றோர் அறியாவாறே வளர்த்து வந்தனர். அதனால், இடையறாது கலந்து மகிழ்தல் அவர்க்கு இயலாது போயிற்று. மேலும் அவர்கள் அன்பு வாழ்க்கைக்கு எத்தனையோ இடையூறுகளும் உண்டாயின. அதனால், ஒருவரை ஒருவர் காண்பதும் அரிதாகிவிட்டது. தன் அன்பனைக் காணமாட்டாது, அப் பெண் பெரிதும் கலங்கினாள். அக் கலக்கம் பெரிதாயிற்று. அதனால் அவள் உடல் நலம் குன்றிற்று. அதை ஊராரும் உணரத் தொடங்கி விட்டனர். அஃதறிந்த அப்பெண், தான் கொண்ட அக்காதல் உறவு வெளிப்பட்டு விடுமோ என அஞ்சினாள்.அதனால், அவள் உடல் நலம் மேலும் கெட்டது.

அப் பெண்ணின் இந் நிலையினை அவள் தோழி அறிந்தாள்; அறிவே உருவாய் வந்த அவள், அந்நிலை மேலும் நீண்டால், அப்பெண் இறந்து விடுவாள் என அஞ்சினாள். இருவரும் பலர் அறிய மணம் புரிந்துகொள்வதே, அவள் கவலை போக்கும் அருமருந்தாம் என எண்ணினாள். ஆனால், மண வினைக்காம் முயற்சியின் மேற் கோடல் அப்பெண்ணால் இயலாது. இது அவள் பெண்மைக்கே இழுக்காம்: அதை மேற்கொள்ளுதல் ஆண்மகனாய அவள் அன்