பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

இலக்கியம், மக்கள் எண்ணத்திற்கு உருவளிப்பது: ஆகவே, ஒரு நாட்டு இலக்கியம், அந்நாட்டு மக்களின் மனநிலைக்கேற்பவே அமையும் : ஒரு நாட்டின் மக்கள், எப்போதும் ஒரு நிலையினராதல் இல்லை : ஒரு காலத்தில் உயர்நிலை பெற்று வாழ்ந்தவர், ஒரு காலத்தில் தாழ்நிலை உற்று வாழ் விழப்பர் : ஒரு காலத்தில் தாழ்ந்திருந்தவர், ஒரு காலத்தே உயர்நிலை பெறுதலும் உண்டு. மக்களின் இவ்வுயர்வு தாழ்வுகளுக்கேற்பவே, அவர் இலக்கியமும் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுமாதலின் உயர்ந்த இலக்கியம் தோன்றிய நாட்டில், ஒரு காலத்தில் இழிந்த இலக்கியங்கள் தோன்றுதலும், தாழ்ந்த இலக்கியங்களையே கண்ட ஒரு நாட்டில் உயர்ந்த இலக்கியங்கள் தோன்றி விடுதலும் உண்டு.

ஒரு நாட்டின் மக்கள் வாழ்க்கை, அந்நாட்டி அரசியலோடு தொடர்புடைத்து : நாட்டில் நல்லரசு நிலவின், நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்வர் : அவ்வரசு, நெறி பிறழின், மக்களும் அல்லற்பட்டு அழுவர். ஆகவே, இலக்கியம், அரசியலோடும் தொடர்புடைத்தாம். அரசியல் வாழ்வு, மக்கள் மனவளத்திற்குக் காரணமாம் : மக்கள் மனவளம், இலக்கியத் தோற்றத்திற்கு காரணமாம்.

தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களின் பரப்பும் பான்மையும் பலப்பலவாம். ஒரு மொழியில் தோன்றிய