பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

அப்பழம் எவ்வளவு பெரிது. அதைத் தாங்கிக்கொண் டிருக்கும் காம்பு எவ்வளவு சிறிது என்பதனை நோக்கினே கொல் : அவ்வளவு சிறிய காம்பு, இவ்வளவு பெரிய பழத்தை இதுவரையும் தாங்கியிருந்ததே அரிய செயல்: அப்பழம் மேலும் மேலும் பருத்துப் பழுக்கத் தொடங்கின், பிறரால் பறிக்கப்பட்டுப் பாழாவது ஒருபுறம் இருக்கத், தாங்கியிருக்கும் அக்கிளே முறியக் கீழே வீழ்ந்து தான்ே பாழாதலும் உண்டு. ஆகவே, பழம் பழுத்துப் பக்குவப் படும்வரை காவல் புரிந்து, பக்குவம் பெற்றவுடன், பறித்து வைக்க வேண்டிய பெருங் கவலை,இம் மரத்தை வளர்த்துப் பேணுக் காப்பானுக்குப் பெரிதாம். அது போன்ற கவலே. உனக்கு இல்லை. அதல்ை, இம் மரத்திற்குடையானுக்கு உள்ள கவலை எவ்வளவு பெரிது என்பதை நீ அறியாய், இரு கிலேமைகளேயும் எடுத்துக் கூறக் கேட்ட இப்போதாவது. இப்பழம் அளவின்றிப் பருத்துப் பழுத்துத் தான்ே பாழாகா வண்ணமும், பிறரால் களவாடிச் செல்லா வண்ணமும் காத்து நின்று காலம் அறிந்து பறித்துப் பயன் கொள்ன. வல்ல காவலன் ஒருவன் இம்மரத்திற்குத் தேவை என்பது நினக்குப் புரிகிறதா ? " -

தனக்கும் அவனுக்கும் தொடர்பில்லாதது போல் தோன்றும் இதைக் கூறிய அவள், அம்மட்டோடு நில்லாது. அதைத் தொடர்ந்து: " அன்ப ! என் உயிர்த் தோழி நினக்கே உரியவள்! பிறர் எவரும் மணம் பேசி வருதல்" இயலாது; எவ்வளவு பெரிய காதல் துயரையும், எவ்வளவு 酰 ண்ட காலத்தி ற்கு வேண்டுமாயினும் தாங்கி கிற்கும்.