பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

மக்களைப் பேணி வளர்க்கும் பண்பும், பக்குவமும் இநன்கு வாய்க்கப் பெற்றவர் மகளிர். தான்் பெற்ற இளம் சிறர்களுக்கு அறிவுரைகளே அன்பு கலந்து ஊட்டும் அப் பணியினைப் பிற மகளிர்பால் ஒப்படைப்பதினும், அதை, அச் சிறுவர்களைப் பெற்ற அத்தியுேரி மேற்கொண்டால், அச் சிறுவர்கள், மாண்பு நிறைந்த ஆண்தகைகளாய் வளர்ந்து வாழ்வு பெறுவர். ஒரு தாய் அறிவன அறிந்த அறிவுடையவள். தாயன்பு நிறைந்தவள். தவறு செய்தால், செய்தவர் தன் கணவனே ஆயினும், அத்தவற்றினே எடுத் துக் காட்டி இடித்துரைத்துத் திருத்துவதும் தன் கடனே எனக் கொண்ட தலையாய அறிவுடையாள். அத்தகையாள் கணவன், ஒழுக்கம் தவறிவிட்டான். மனேவியைப் பிரிந்து பரத்தை விடு சென்றுவிட்டான். பின்னர், பிழை உணர்ந்து வீடு திரும்பினன். அவன் வீடு திரும்பும்காலே, தன் மகனுக்கு அறிவுரை கூறும் அப்பணி மேற்கொண்டிருங் தாள் அவள். அந்நிலையினைக் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கொண்டு, கணவன் நற் பண்பு கண்டு பாராட்டும் தன் உள்ளம், அவன் பழி செயல்கண்டு பழிக்கும் என்பதை அவனுக்கு எடுத்துக் கூறித் திருத்த எண்ணிள்ை. உடனே தன் மகனே அழைத்து அண்த்துக்கொண்டே, அவனுக்கு அறிவுரை கூறுவாள் போல் பின்வருமாறு கூறி முடித்தாள்.

"என் அன்பைக் கொள்ளே கொண்ட அருமை மகனே "தந்தையர் ஒப்பர் மக்கள் என்று உலகப் பெரியோர்கள் உரைப்பதற்கேற்ப, உன் தந்தையின் வடிவையும் வனப்பை யும் பெற்று விளங்குகின்றன. அதைக் கண்டு யானும் மகிழ்கின்றேன். ஆனால் உன் தந்தை குணங்களுள்