பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

அவன் கேட்டுச் சினவா வகையில், தாய் போல் கழறித் தழிஇக் கோடல் ஆப்மனக் கிழத்திக்கும் உரித்து என மொழிப " என்ற விதிக் கிணங்க, அன்புரையால் அறி வரை ஊட்டிய இப்பெண்ணின் செயல், பெண்டிர்க் கழகு எதிர் பேசாதிருத்தல் ' என்ற பிழை அறிவுடைய ராய்க் கணவர் தவறு செய்யினும், கண்ணிர் விட்டுக் கலங்கி நிற்பதல்லது கண்டித்துத் திருத்துதல் கூடாது என்ற எண்ணம் வாய்க்கப் பெற்ற அடிமைப் பெண் களுக்கும், கணவன்பால் சிறு பிழை காணினும், ஏன், பிழையே காணுத விடத்தும், வன்சொல் வழங்கி, வல் வழக்குத் தொடுத்து வாழ்விழந்து போகும் வாயாடிப் பெண் களுக்கும் பேரறிவூட்டும் பெருந்துணையாதல் வேண்டும் 钴了岔了 விரும்பிய புலவர் ஒருவர், அப்பெண்ணின் செயல் இலக்கியமாக்கி இன்புற்றுச் சென்றுளர் - - -

'செம்மால்: வனப்பெலாம் நுந்தையை ஒப்பினும், துந்தை

நிலப்பாலுள் ஒத்தகுறி என்வாய்க் கேட்டு ஒத்தி: கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றிமாட்டு ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி ஒன்றினேம் யாம் என்று உணந்தாரை நுந்தைபோல் - மென்தோள்,நெகிழவிடல். - * ~ ...

பால்கொளல் இன்றிப் பகல்போல் முறைக்குஒல்கா

கோல்செம்மை ஒத்தி; பெரும! மற்றுஒவ்வாதி கால்பொரு பூவின் கவின்வாட நுங்தைபோல்

சால்பாய்ந்தார் சாயவிடல்;

4