பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 O

விதல்அறியா விழுப்பொருள் கச்சியார்க்கு ஈதல்மாட்டு ஒத்தி; பெரும! மற்று ஒவ்வாதி மாதர்மென் கோக்கின் மகளிரை துங்தைபோல் நோய்கூர நோக்காய் விடல் ' -கலித்தொகை 86.

அன்பு கொண்டு ஆசையோடு மணந்துகொண்ட மனைவியோடு வாழ்கிருன் ஒர் இளைஞன். மணமும் அண்மையிலேயே முடிந்தது. இளேஞன், இல்லிருந்து நல்லறமாற்றி வாழ மேண்டும் : அறவோர்க்கு அளித்தும், அந்தணர் ஒம்பியும், துறவிகட்குத் துணை புரிந்தும், விருந் தினரை வரவேற்றுப் போற்றியும் வாழ் வாங்கு வாழ வேண்டும் அதுவே இல்லறம் மேற் கொண்டாரின் இயல்புடைப் பண்பாம் என்ற இல்லற கெறி உணர்ந்தவன். அம்மட்டோ அவ்வில்லறத்தை இனிது ஆற்றுதற்கு இடை விடா உழைப்பு வேண்டும் திரைகடல் ஒடித் திரண்ட பொருள் கொண்டு வருதல் வேண்டும் இசையும் இன் பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு ஆகாது என்ப. ஆகவே, பொருளும் புகழும் பெருமுயற்சி உடையார்க்கே உண்டாம் ஊக்கமும் உரனும் காட்டி உழைக்காது, உறங்கிக் கிடப்பார்க்கு உண்டாகாது என்ற உணர்வும் வரப் பெற்றவன் அவ்விகளஞன். அதனல், அழகும் அன்பும் ஆற்றலும் பெற்ற தன் ஆருயிர் மனே வியைப் பிரிந்து பொருள் ஈட்டி வருவான் வேண்டி, வேற்றுரர் நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

இன்பம் தரும் பொருளின்பால் எளிதில் இங்கி விடுவது மக்கள் உள்ளத்தின் இயல்பு. ஒரு புல இன்பத்