பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஏற்கனவே காதல் நிறைந்தவன். காதல் உடையார், கண்ணிர் கானின், எதற்கும் கலங்கா அவன் உள். ளம், கலங்கி விடும். அத்தகையானல், தன் காதலியின் துயர் கிலேயினைப் பிறர் எடுத்துக் காட்டிய பின்னரும், அக்காதலிபால் சென்று, அவள் கண்ணிர் துடைக் காது, கருதிய காரியத்தை மேற்கொள்ளுவது இயலாது போயிற்று. அதனுல், விரைந்து சென்றவன், வழியில் கின்று விட்டான் திரும்பி ஊர் நோக்கி மீளத் துணிக் gT&T,

பொருள் ஈட்டிவரும் முயற்சி மேற்கொண்டு வந்த இளைஞன், அவன் காதல், காத்லேயும் கடமை. யையும் எண்ணி எண்ணி அவன் உற்ற கலக்கம், இடைவழியில் உள்ளம் அவனுக்கு உரைத்தவை அது கேட்ட அவன் தடுமாற்றம், மீண்டும் ஊர் செல் வான் வேண்டி மயங்கி நிற்கும் அவன் கிலே ஆகிய இவற்றையெல்லாம் அவன் அறிவு கண்டது. உடனே உள்ளத்தை நோக்கி, ' எதையும் எண்ணித் துணிதல் வேண்டும். ஒரு தொழிலேத் தொடங்காமல் இருப்பது கன்று. தொடங்கிவிட்டால், அதைக் குறைவற: முடித்து வெற்றி கண்ட பின்னரே, வேறு தொழிலைச் சிந்தித்தல் வேண்டும். அவ்வாறின்றித் தொடங்கி இடையே மடங்கி விடுதல் மாண்புடைத்தன்று, இதை உணர்தல் வேண்டும். மனைவியைப் பிரிந்து வந்தி ருத்தல் கூடாது. பிரிந்து பொருள் தேடி வந்துவிட் டோம் வந்த வினையை, இடையே கைநழுவவிட்டு விட்டு ஊர் திரும்புதல் அறிவுடைமை ஆகாது. அ.து. அறியாமை என்பது மட்டுமன்று, பிறர் கண்டு, எள்ளி