பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

நகையாடிப் பழிக்கத்தக்க பெரும் பழியுமாம். ஆகவே, தம்மை உடையானை, உயர்நிலைக்குக் கொண்டு செல்வதற்கு மாறாக, இழிநிலைக்கு இழுத்துச் செல்லும் எண்ணத்தை ஈண்டே விட்டொழிக. வினைமேற் செல்வானை வழியிடைத் தடுத்து நிறுத்தாதே" என்று அறிவுரை பல வழங்கிற்று.

அறிவு உரைத்த அறவுரையினைக் கேட்டான் இளைஞன்; உள்ளம் கூறியன கேட்டு ஊர் நோக்கிப் புறப்பட்ட அவன் கால்கள் அந்நிலையே நின்று விட்டன. உள்ளம் பின்புறம் ஈர்ப்ப, அறிவு முன்புறம் உந்தக் கால்கள் அசையமாட்டாவாயின. இளைஞன் செய்வதறியாது திகைத்தான். முன்னோக்கிச் செல்வதோ, பின்னோக்கி மீள்வதோ செய்யாது வழியிலேயே நின்று விட்டான். உள்ளம் எடுத்துக் காட்டிய காதலியின் அழகும், அன்பும், பிரிவுத் துயர் பொறாது கண்ணீர் பெருக நிற்கும் அவள் கலக்கமும் அவனை ஊர் நோக்கியும் அறிவு எடுத்துக் காட்டிய கடமை உணர்ச்சி, வினைமேற் கொண்டார் அவ்வினை யாற்றுமாறும் துரத்தின. அதைக்? குறைவறச் செய்து முடிப்பதால் ஆம் புகழ், இடையே விட்டு மீள்வதால் ஆம் பழி ஆகிய இவைகள், அவனை வினைமேல் விரைந்து செல்லத் துாண்டின. இவ்வாறு உள்ளம் ஒருபால் இழுக்க, அறிவு ஒருபால் உந்த இளைஞன் செய்வதறியாது கலங்கினான். உள்ளத்திற்கும், அறிவிற்கும் நடைபெறும் இப் போராட்டத்தை ஒதுங்கி நின்று பார்ப்பதல்லது, அவற்றுள் ஒன்றன்பால் நிற்கும் துணிவு உண்டாகவில்லை. அப் போராட்டத்தின் விளைவால், தன் உடலும், உயிரும் அழிந்துவிடுமோ என அஞ்சினான்.