பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழ்நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டும், தமிழகத்து அமைதி மிகுந்த அரசியல் வாழ்வை நிலை குலையச் செய்தும் திரிந்தமைக்கும், அக்காலத்தே தமிழ் நாடாண்டிருந்த சேர, சோழ, பாண்டியப் பேரரசர்களும், குறுநில மன்னர்களும், அவர்களை வென்று துரத்தி விழுப்புகழ் கொண்டமைக்கும் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.

இவ்வாறு பகைவர் பலர், தம் நாட்டிற்குள் புகுந்து அழிவு செய்து செல்வதால், நாட்டின் புற வாழ்வில் அமைதி குலைவதையும், நாட்டில் அமைதி குலைவதால், வீட்டிலும் அமைதி குலைவதையும், கண்ட பழந்தமிழ் நாட்டு ஆடவரும் மகளிரும், நாடுகாவலில் நாட்டம் கொண்டனர். தங்கள் நாட்டிற்குக் கேடுவந்துறா வண்ணம் காத்தலைத் தம் தலையாய கடமையாகக் கொண்டனர். அதன் விளைவாய், அக்காலத்து ஆடவர் மகளிர் இரு பாலாரும், வீரம் செறிந்து விளங்கினர். “போர்க் குறிக்காயமே புகழின் காயம்,” “அதுவும் புண்ணோ? புகழின் கண்ணே,” என்ற பேரெண்ணம் உடையராய்ப் போரிட்டு, வீரப்புண் பெறாத நாளை வீண் நாள் என வெறுத்தனர் வீரர்கள்; “விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் தன் நாளை எடுத்து” என்றார் வள்ளுவனார். வீர மக்களைப் பெறாத மகளிர் மலடிகள் எனப் பழித்துரைக்கப் பெற்றனர். அதனால், அக வாழ்க்கையின் அன்பையும், அருளையும் அறநெறியையும் தம் பாடற்பொருளாகக் கொண்டவர்கள், அக்கால ஆடவர் மகளிர்பால் பொருந்திக் கிடந்த ஆண்மைச் சிறப்பை சிறப்பையும்