பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

யும் தம் இலக்கியப் பொருளாகக் கொண்டு இனிய பாக்கள் பல பாடிச் சென்றனர். அவற்றுள் ஒரு சில:

பகையரசர் இருவரின் இரு பெரும் படைகளும் ஒரு புலத்தே எதிர்த்து நின்றன. எதிர் எதிர் நிற்கும் இரு. படைகளுக்கு மிடையே வந்து நின்றான். ஒரு படையைச் சேர்ந்த வீரன் ஒருவன். வந்து நின்றவன், தனக்கு முன்னே நிற்கும் பகைவர் படையை நோக்கி “பகைவர்காள்! எங்கள் படைத் தலைவன் பேராண்மை அறியாது பகை கொண்டு விட்டீர்கள்! எங்கள் படைத் தலைவன், படைக்கலங்களோடு களம் புகுந்துவிடின், வில்லும் வேலும் வாளும் முதலாம் அவன் கைப்படைகளால் அழிவுறாத படைகளும் உளவோ? பாரெலாம் திரண்டு வரினும், தன் படைக்கலங்களால் பாழாக்கும் பேராற்றல் உடையவன். அவன் பேராண்மை அறியாது பகைத்துக் கொண்டீர்களே! உங்கள் பேதமைதான் என்ன!” என்று கூறித் தன் படைத் தலைவன் பெருமையினைப் பாராட்டினான்.

அது கேட்டான், அவன் பகைவர் படையின்முன் வரிசையினால் நிற்கும் வீரன் ஒருவன். அவன் கூறியன கேட்டு நடுக்கம் தோன்றுவதற்கு மாறாக, அவனுக்கு நகையே தோன்றிற்று. பகைவர் படைத் தலைவன் பேராண்மை குறித்து அவன் படைவீரர் கூறியன, அவனுக்கு உண்மைப் பெருமையாகத் தோன்றவில்லை அப்படைத் தலைவனை விடத் தன் படைத் தலைவனே பேராற்றல் மிக்கவன் என அறிந்தான். உடனே, பகைவர் படை வீரனை நோக்கிப் பின் வருமாறு கூறினான்: