பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

“வீர! உங்கள் படைத் தலைவன்பால் உளதாக நீ கூறும் அப்பேராண்மை, உண்மையில் பேராண்மையாகாது! படைக் கலங்களோடு களம் புகுந்து, பகைவரை வெல்லுதல் உங்கள் படைத் தலைவன் ஒருவனாலேயே இயலும் என எண்ணுகின்றனையே, என்னே நின் பேதைமை! அவ்வாறு போரிட்டுக் களம் வேறல் எம் போலும் வீரர்க்கும் எளிதில் இயலக் கூடியதன்றோ? எல்லோரும் எளிதில் முடிக்கவல்ல ஒரு செயலைத் தானும் முடிப்பதோ தறுகணாளர்க்கு அழகு? ஒருவன், உண்மையில் பெரு வீரனாயின் அவனொடு பகை கொள்வாரும் இருத்தல் ஒண்ணுமோ? அறியாமையாற் செய்த பிழை கண்டு, ஒரு சிலரோடு அவன் பகை கொண்டு விடுவனாயின், அப்பகைவர் அவனைக் காணவுமன்றோ நடுங்குதல் வேண்டும்? பாம்பினிடத்தில் அச்சம் உளது எனின், அவ்வச்சம் அப்பாம்பைக் கண்டவிடத்து மட்டுமே உண்டாதல் இல்லை; அது வாழும் புற்றைக் காணினும் அச்சம் உண்டாம்; கொல்லும் ஆனேறு கண்டு அஞ்சுவார். அதைக் கண்டவிடத்து மட்டுமே அஞ்சுவர் என்பதில்லை. அதுதிரியும் ஊர் மன்றத்தைக் காணினும் உள்ளம் நடுங்குவர். அதைப் போல், உண்மை வீரனைக் கண்ட விடத்து மட்டுமேயல்லால், அவன் வாழும் அரணைக் காணினும், பைகவர் அஞ்சி ஓடுதல் வேண்டும். அதுவே உண்மை வீரனுக்கு அழகு. பகைவர், அதன் படைபலம் கண்டும் அஞ்சாது, படையெடுத்து வர, அவர் மீது படையோடு சென்று போரிட்டு அழிக்கும் ஆண்மையும் ஓர் ஆண்மையோ? தன்னையே எதிர்த்துப் படையெடுத்து வருமளவு வளர்ந்த பகைவரை உடை