பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வீரர்களின் பேராண்மையினைப் பாராட்டிக் கூறும் புறத்திணை இலக்கியங்களும் தோன்றுவதற்கு மாறாக, நிலையாமை கூறும் காஞ்சித்திணை தழுவிய இலக்கியங்கள் தோன்றலாயின; அவற்றுள் ஒன்று:

மலைகளும் குன்றுகளும் மண்டிக் கிடக்கும் இம்மாநிலம், சேர, சோழ, பாண்டியராகிய தமிழரசர் மூவர்க்கும் ஒத்த உரிமை உடையதாகும்; மூவர்க்கும் உரிய தமிழகத்தை, ஒருவராகவே நின்று ஆண்ட அரசர்களும் உளர்; தமிழகம், தமிழரசர் மூவர்க்கும் பொது என்ற சொல்லைக் கேட்கவும் பொறாது, அந்நாடுகள் அனைத்தையும் தம் ஒரு குடைக் கீழ் வைத்து ஆண்ட அவ்வரசர்களும், இறவா நிலைபெற்றுப் பெருக வாழ்ந்தாரல்லர்; அவர் தம் வாழ்நாட்களும் வற்றிவிட்டன; அத்தகைய முடிவேந்தரும், முடிவில் மடிந்து மண்ணில் வீழ்ந்துப் பிடிசாம்பலாகி மறைந்தே போயினர்; அவர் ஈட்டிய பெருநிதி, அவர் போவுழி, அவர்க்குத் துணையார் அவரோடு உடன் செல்லவில்லை; அவர் அப் பெரும் பொருளை இழந்தே சென்றனர். ஆகவே, அரச வாழ்வும், அரும்பொருளும், செல்லும் உயிர்க்கு நல்ல துணையாகா; அவ்வுயிர்க்கு அது இப்பிறப்பில் செய்த அறிவினையே, ஆருயிர்த் துணையாம்; உற்றாரும், உறவினரும், பெற்றோரும், பிள்ளைகளும் ஒன்றுகூடி அழப்போம் உயிர், இவ்வுலகை விட்டு, இறவாப் பேரின்பம் நிறைந்த வீட்டுலகை அடைவதற்குத் தெப்பமாய்த் துணைபுரிவது. அவ் அறவினை ஒன்றே; வாழுங்கால், பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் தெப்பமாய் நின்று துணை புரியும் நல்வினைகளை, மறந்து