பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. சமய இலக்கியங்கள்

இறைவழி பாட்டெண்ணம், தெடாக்கத்தில், அச்சம் காரணமாகவே தோன்றியதாகும். தமக்குத் துன்பம் தந்த பொருள்களையே மக்கள் முதற்கண் வழிபடத் தொடங்கினர். தமக்குத் துயர் தந்த பொருள்களை வணங்கிய அவர்கள், பின்னர்த் தமக்கு ஊறு தருதற்குப் பதிலாக, உறுபயன் தந்த பொருள்களையும் வணங்கத் தலைப்பட்டனர். இன்பம் தந்த பொருள்களையும் வணங்கிய அவர் வண்க்கம், அச்சம் காரணமாகப் பிறந்ததன்று; மாறாக, அன்பு காரணமாகப் பிறந்ததாம். இறை வழிபாடு, அச்சம், அன்பு ஆகிய இவ்விரண்டின் அடிப்படையாகவே தோன்றும் என்பதும், அவற்றுள்ளும், அச்சம் அடிப்படையாகத் தோன்றிய வழிபாடு, அன்பு அடிப்படையாகத் தோன்றும் வழிபாட்டிற்கு வழிகாட்டியாய் முன்னர்த் தோன்றியதாம் என்பதும், “அஞ்சி ஆயினும் அன்பு கொண்டு ஆயினும், நெஞ்சம் ! வாழி நினை நின்றி பூரனை” என்ற திருநாவுக்கரசர் திருவாக்காலும் உறுதியாதல் உணர்க.

ஆக்கல் அழித்தல் ஆய இரு பேராற்றல்களையும் ஒருங்கே பெற்றுள்ள ஒரு பொருளின் ஆக்கல் ஆற்றலை அறியாது, அழிவாற்றலை மட்டும் அறிந்தார்க்கு அப்