பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84.

சமணரும் பெளத்தரும் மக்கள் விரும்பும் இசைப் பாடல்களேயும், வரலாறுகளேயும் துணைக் கொண்டு. இலக்கியங்கள் இயற்றித் தம் சமயங்களே வளர்ப்பது கண்ட சைவர்களும், தாமும் அந்நெறி சென்று தம் சமயத்தை வளர்க்க எண்ணினர் : அகத்துறைப் பாடல் கள்பால் காட்டும் ஆர்வம், அக்கால மக்கள் உள்ளத்திலும் மங்காதிருப்பது கண்ட அவர்கள், தம் இலக்கியப் பொருளாக, தம் காலத்தே வாழ்ந்தார் ஒருவர் வர லர்ற்றினை மேற்கொள்ளாது. மக்கள் அனைவர்க்கும் ஒத்த வாழ்க்கையின வகுத்துக் கூறும் அகத்திணேத் துறைகள் பலவற்றையும், காட்சி முதலாக வரிசைப்படுத்தி வகுத் துரைத்து, அப்பொருள்களோடு கலந்து, தம் சமயக் கடவுளரின் பெருமையினேப் பாராட்டிக் கூறும் நெறியினை மேற் கொண்டனர் : அம்மட்டோ, தம் கடவுளரின் பெருமை கூறிப் பாராட்டும் பாக்களேயும், அவ்வகத்திணே தழுவியே ஆக்கினர் அவ்வாறு ஆக்கிய அவ்விருவகைப் பாடல்களையும் பண்டு தாம் விரும்பிய அகவற்பாவால் ஆக்காது. ஆசிரிய விருத்தம், கொச்சகக்கலிப்பா, கட்டளைக் கலித்துறை முதலாம் இசைப் பாக்களால் ஆக்கினர். இம்முயற்சியில் முகிழ்த்தனவே, மணிமொழியார் அளித்த இரு மொழிகளும்:

- 'சிறைவான் புனல் தில்லச் சிற்றம்பலத்தும் என் சிந்தை

உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல்

- புக்கோ இறைவா! தடவரைத் தோட்கு என்கொலாம் -

- - வந்தெய்தியதே. '