பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

வதற்கே வாய்ப்பிலாது போயிற்று. நாடு நல்லரசிழந்து அல்லற்பட்டுக் கிடந்ததால், மக்கள் மனக்கவலே மிக்கனர். அதனல், இலக்கிய வளர்ச்சியிலோ சமய வளர்ச்சியிலோ அவர்கள் ஊக்கம் காட்டாராயினர். கி. பி. 600-ல், களப் பிரரை வென்று துரத்தி நல்லரசமைத்து நாடாளத் தொடங்கின்ை கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன். தமிழகம் மீண்டும் புத்துயிர் பெற்று, இலக்கிய வளர்ச் சியிலும், ಆLDL) வளர்ச்சியிலும் பேருக்கம் காட்டத் தொடங்கிற்று, சமயங்கள், அரச ஆணையை அரணுகக் கொண்டு வளரத் தொடங்கியதும் இக்காலத்திலேயே, :

வட நாட்டினின்றும் போந்த சமணரும் பெளத்தரும் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெறுதல் கண்ட தமிழ் நாட் டுச் சைவர்க்கும், வைஷ்ணவர்க்கும், சிறப்பாகச் சைவர்க்கு அவர்கள்பால் சினம் பிறந்தது. இரு சாராரிடையே பகை வளர்ந்தது. தாம் இயற்றும் இலக்கியங்களுள் ஒருவரை - யொருவர் பழித்துரைக்கத் தலைப்பட்டனர். சைவ சமய ஆசிரியர்கள் ஆக்கிய தேவார இலக்கியங்களே நோக்கின், அக்கால கிலே நன்கு புலகுைம். சம்பந்தர், பாடிய பதிகம் ஒவ்வொன்றிலும், ஒரு பாட்டு, சமணரையும், புத்தரையும் வழிக்கவே ஆக்கப்பெற்றுளதும் அறிக.

புத்தரும் தோகையம் பிலிகொள் பொய்ம்மொழிப் பித்தரும். பேசுவ பேச்சல்ல ; பீடுடைக் * ...

கொத்தலர்தண்பொழில் கோழும்பம் மேவிய ஆத்தன ஏத்துமின் அல்லல் அறுக்கவே.