பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

இலங்கைக் காட்சிகள்

ஆக்கினான் என்று சிலர் சொல்லுகிறார்கள். மலையின் உச்சியிலே அரண்மனையை அமைத்துக் கலைத்திறமை நிரம்பிய பகுதிகளை நிறுவிய அரசன் தன் தந்தையைக் கொன்றவனாக இருந்தாலும் கலைச்சுவை படைத்தவனாக இருந்தான். அந்த ஓவியங்களை அங்கே வரைந்த ஓவியன் யாரோ! அவனை நாம் அறியோம். கஸ்ஸபன் செய்த போரையும் ஆற்றிய கொடுஞ் செயல்களையும் மகாவம்சம் சொல்கிறது. ஆனால் இன்று சிகிரிக் குன்றம் கலைச்சுவை தேர்ந்து வாழும் வாழ்க்கையையும், இக்காலத்தில் செயற்கரிய வகையில் ஒன்றை எண்ணி, எண்ணியபடி வெறுமையாகக்கிடந்த மலையை அளகையாக்கிய பெருந்திறலையுமே காட்டுகிறது. இந்த இரண்டையும் நினைக்கையில் முன்னே சொன்ன கொடுமை மறந்து போகிறது. அது போன காலச் சரித்திரம். இது இப்போதும் நம் கண்ணை மகிழ்விக்கும் விருந்து.