பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

இலங்கைக் காட்சிகள்

பராக்கிரம சமுத்திரம் என்ற பெரிய ஏரியின் கரையில் அந்த விடுதி அமைந்திருக்கிறது. நல்ல காற்று வரும் இடம். சுற்றிலும் பழமையை நினைவுறுத்தும் சின்னங்களுக்கிடையே இந்த விடுதி ஒன்றுதான் புதுமையின் விளைவாக நிற்கிறது. உணவு உண்டு சிறிது நேரம் இளைப்பாறியவுடன் இடிந்த நகரத்தைக் காணப் புறப்பட்டோம்.

பொலன்னறுவை கொழும்பு நகரத்திலிருந்து 158-மைல் தூரத்தில் இருக்கிறது. இருபத்தைந்து மைல்கள் காட்டினூடே செல்லவேண்டும். காடாக இருந்தாலும் நல்ல சாலை அமைந்திருக்கிறது. பல ஆண்டுகளாகப் பொலன்னறுவை காட்டிற்குள் மறைந்து கிடந்தது. நாகரிக மக்களும் மன்னரும் வாழ்ந்த இடத்தில் புலியும் யானையும் நரியும் பாம்பும் வாழ்ந்தன. இலங்கைச் சரித்திரத்தின் சிறந்த பகுதிக்குரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த இந்த இடம் 1901-ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்தது. அதுமுதல் இடத்தைக் சுத்தப்படுத்திக் காடு திருத்திச் சாலை போட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டிய முயற்சிகள் நடைபெறத் தொடங்கின.

11-ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை முழுவதும் சோழ சாம்ராஜ்யத்துக்கு உரியதாக இருந்தது. முதலாவது இராஜராஜ சோழன் தஞ்சையில் இருந்து அரசாட்சி புரிந்த காலம் அது. அப்பால் அவனுடைய மகனாகிய இராஜேந்திர சோழன் காலத்தில் அவ்வரசன் இலங்கையரசனைச் சிறைப்படுத்தினான். அக்காலத்தில் இலங்கையில் இந்தப் பொலன-