பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

இலங்கைக் காட்சிகள்

தில் பெரியதாக உள்ள திருவுருவம் வெயிலும் மழையும் கண்ட திருமேனியாக இருக்கிறது. ஆனல் திருமுகத்தில் சாந்தம் தவழ்கிறது. அதனையடுத்து ஒரு சிறிய குடைவரைக் கோயிலுக்குள் ஒரு திருவுருவம் அமர்ந்த கோலத்தில் இருக்கிறது. அந்தக் குகையின் சுவர்களில் வண்ண ஓவியங்களை எழுதியிருந்தார்கள். கதிரவன் ஒளியும் காற்றின் வீச்சும் அவற்றின் அழகைக் கெடுத்து மறைத்துவிட்டன. ஆனாலும் மங்கின இளம்பருவக் கனவு போல அவை அங்கங்கே காட்சியளிக்கின்றன.

அடுத்து, நிற்கும் கோலத் திருவுருவமும் அதனைச் சார்ந்து கிடந்த கோலத் திருவுருவமும் உள்ளன. தம்முடைய குருநாதராகிய புத்தர்பிரான் பரிநிர்வாணம் அடைந்த துயரத்தோடு நிற்கும் ஆனந்தருடைய திருவுருவமே நிற்கும் உருவம் என்று சிலர் சொல்கிறார்கள்.

சயனக் கோலத்தில் உள்ள புத்தர் உருவத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். 44 அடி நீளமுள்ள நெடிய திருவுருவம். வலப் பக்கமாகத் திரும்பித் தலையணையின்மேல் வலக்கையை மடித்து வைத்துத் துயிலும் கோலம், கல்லிலே உள்ள தலையனையா அது? அது மெத்தென்ற பஞ்சுத் தலையணையல்லவா? தலை வைத்த இடத்தில் அமுங்கியிருக்கும் படி சிற்பி அதை வடித்து அமைத்திருக்கிறான். புத்தர் பிரானுடைய பாதங்களில் கமல முத்திரை இருக்கிறது.

இந்த நான்கு திருவுருவங்களையும் பார்த்து விட்டுப் பொத்கல் விகாரம் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே இயற்கையாக உள்ள பாறையில் சிற்பி தன்