புறப்பாடு
7
பெற்ற வெற்றி தோல்விகளையும் சாமான்யமாக நாம் எங்கே நினைந்து பார்க்கப்போகிருேம் ! நாம் நம்முடைய சுய சரித்திரத்தை எழுதுவதாக இருந்தால் அவற்றை நினைந்து பார்க்கச் சந்தர்ப்பம் வரும். ஒவ்வொரு நாளும் அடுத்த நாளைப்பற்றிய கவலை முன் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும்போது போன நாளைப்பற்றி நின்று நினைத்துப் பார்க்கச் சமயம் ஏது? ஆகவே சுய சரித்திரம் எழுதினல் அவற்றை நினைத்துப் பார்க்கும் அவசியம் நேரும்.
எல்லோருமே சுய சரித்திரம் எழுதிவிட முடியுமா? மகாத்மா காந்தி எழுதலாம் ; ஜவாஹர்லால் எழுதலாம்; மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதிலாம். அவை காவியங்களைப்போல ஜனங்களுக்குச் சுவையையும் நன்மையையும் உண்டாக்கும். நாம் எழுதினால் திருப்பித் திருப்பி நாமே வாசித்து மகிழ வேண்டியதுதான்.
இலங்கைக்குப் போகப் பாஸ்போர்ட்டு வேண்டுமானால் கொஞ்சம் சுயசரித்திரம் எழுதும் மனோபாவம் வரவேண்டும். அப்போதுதான் கமிஷனர் காரியாலயத்தில் கேட்கும் கேள்விகளுக்குச் சுவாரசியமாகப் பதில் அளிக்க முடியும்.
இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் எதற்காக வைத்திருக்கிருர்கள்? இந்தியாவில் மாத்திரம் இப்படி என்பதில்லை. எந்தத் தேசமானுலும் சரி, அதிலிருந்து அயல்நாட்டுக்குப் போக வேண்டுமானால் இந்தமாதிரி கட்டுப்பாடுகள் உண்டு. அபாயமில்லாத மக்கள் அயல் நாட்டுக்குப் போய் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எத்தனையோ வகைகளில் அபாயத்தை உண்-