பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

இலங்கைக் காட்சிகள்

தில் ஐயமில்லை. மலரின் தோற்றமும் தாமரையின் தோற்றத்தையே கொண்டிருக்கிறது. ஆனால் நிறம் மட்டும் வேறு; இது பொன் நிறம் உடையது. ஆகவே, இதைப் பொற்றாமரை என்று சொல்வது பிழையா?

ஹக்கலாப் பூந்தோட்டத்தை விட்டுப் புறப்பட்டோம். சீதா எலியா என்ற இடத்துக்கு வந்தோம். அங்கே சிறிய கோயில் ஒன்று இருக்கிறது. ராம லஷ்மணர் சீதை என்ற மூவருடைய விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்கிறார்கள். அநுமானும் இருக்கிறார். இதைச் சீதையம்மன் கோயில் என்றும் சொல்வதுண்டாம். சீதை சிறையிருந்த இடத்தின் ஒரு பகுதி இது என்று சொல்கிறார்கள். அந்தக் கோயிலின் பின் புறத்தில் சிறிய மலையாறு ஓடுகிறது. அது ஓரிடத்தில் பூமிக்குள்ளே சென்று சில அடிகளுக்கு அப்பால் கொப்புளித்து வெளி வருகிறது. பூமிக்குள்ளே புகும் இடத்தில் இலையையோ பூவையோ பறித்துப் போட்டால் சில நிமிஷங்களில் கொப்புளித்து வரும் இடத்தில் அது வெளியே வருகிறது. அநுமான் இலங்கைக்கு நெருப்புவைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குமே. அப்பொழுது சீதை சிறையிருந்த இந்த அசோக வனமும் கரிந்து போய்விட்டதாம். தீயில் அகப்பட்டுக் கரிந்து போகாமல் தப்பிய அசோக மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். சீதையை வருத்திய இராவணன் மீது வனத்திலிருந்த மரங்கள்கூடக் கோபம் கொண்டவைபோல, இவ்வசோக மரங்கள் செந்நிறப் பூக்களுடன் காட்சி அளிக்கின்றன அல்லவா? அதுமான் மூட்டிய தீயினால் ஏற்பட்ட