பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோக வனம்

183

வெப்பத்தைத் தணிக்கச் சீதை அங்கும் இங்கும் பார்த்தாளாம். உடனே அவள் ஒரு குன்றிலே காலினால் ஊன்றினாளாம். அவ்வளவுதான். கற்பாறையிலிருந்து குளிர்ந்த ஜலம் பீரிட்டு வெளி வந்தது. இது வற்றாத நீரூற்றாக இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது' என்று இதைப் பற்றிய கர்ண பரம்பரைச் செய்திகளை ஸ்ரீ குல சபாநாதன் தொகுத்து எழுதியிருக்கிறார்.[1]

சீதையோடு சம்பந்தப்பட்ட இந்த இடம் ஒன்றைத்தான் நான் பார்த்தேன். ஆனால் சீதா வாக்கை, சீதா தலவா, சீதாக்குன்றம், சீதா கங்கை என்ற பெயர்களோடு வேறு சில இடங்கள் இலங்கையில் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அவற்றைப் பார்க்க முடியவில்லை.

திரு சு. நடேசபிள்ளை அவர்கள் சீதா பிராட்டியின் இலங்கை வாசத்தோடு சம்பந்தமுள்ள இடங்களைப் பற்றிப் பல செய்திகளை ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். 'பாலுகமா என்ற இடம் அநுமானல் எரியுண்டதென்று சொல்லப்படுகின்றது. பாலுகமா என்பதன் பொருள் பாழடைந்த கிராமம் என்பதாம். இந்த இடத்தில் புற் பூண்டும் முளைப்பதில்லை. ஹக்கலாவிலிருந்து ஹப்புத்தளை என்ற இடத்திற்குப் போகிற வழியில் வெளிமடா என்னும் அழகிய கிராமத்தின் பக்கத்தில் இராமலங்கா என்ற ஓரிடம் இருக்கின்றது. இங்கேதான் இராவணன் இறுதியாகப் போர்செய்து வீழ்ந்தான் என்றும், அது முதல் இவ்-


  1. நான்காம் தமிழ் விழா மலர், ஈழத்தின் பிரசித்த இடங்கள், ப. 168.