பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

இலங்கைக் காட்சிகள்

விடம் இராமலங்கா எனப் பெயர் பெற்றது என்றும் இங்குள்ள புத்த பிக்ஷுக்கள் ஒரு கர்ண பரம்பரையான ஐதிகத்தைக் கூறுகிறார்கள். இதற்கருகில், தூரும் வெலாபன்சலா என்ற இடத்தில் சீதாபிராட்டி தன் கற்பு நிலையினின்று தவறவில்லையென்று இராம பிரான் முன்னிலையிற் சத்தியம் செய்ததாக ஓர் ஐதிகம் வழங்கி வந்ததென்று மேஜர் போர்ப்ஸ் (Major Forbes) 1840-ஆம் ஆண்டில் வெளியிட்ட "இலங்கையிற் பதினோராண்டுகள்" என்ற தமது புத்தகத்திற் கூறியுள்ளார்.[1]

சீதா எலியாவில் உள்ள ஊற்றைப் பார்த்துவிட்டு அங்குள்ள கோயிலில் கோதண்டராமனையும் சீதாதேவியையும் வணங்கிக் கொண்டு கதிர் காம வேலனுடைய நினைவு எங்களை உந்த அங்கிருந்து புறப்பட்டோம்.


  1. நான்காம் தமிழ் விழா மலர், இலங்கை ஆற்றுப்படை, ப.3,4.