பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

129

விடேன். அதுபோய் உதயமாகும் அந்தச் சந்திரனை அப்படியே விழுங்கி விடட்டும். இந்த உபகாரத்தைச் செய்யமாட்டாயா?' என்று மனம் கரைந்து வேண்டுகிறாள்.


"தாயர்அவை முன்வருத்தும் சந்த்ரோ தயந்தனக்குஉன்
வாய்அரவை விட்டுவிட மாட்டாயோ?-தீயர்அவை
சீறும்அயிற்பெருமாள் தென்கதிர்கா மப்பெருமாள்
ஏறும் மயிற்பெருமா ளே."

[தாயர் அவை - தாய்மார் கூட்டம், தீயர் அவை-தீயவர்களாகிய அசுரர்களின் கூட்டம். அயில் - வேல், மயிலையே மயிற் பெருமாளே என்று மரியாதையாக விளித்தாள்.]

புகழேந்தி பெண்ணாகிவிட்டார். பாட்டு எழுந்தது என்ன காரணமோ, மயிலும் சாந்தம் அடைந்தது. அரவை விட்டுவிட்டது.

இந்த வரலாறும் பாட்டும் முனராகந்தாவில் நினைவுக்கு வந்தன. முருகனுக்கும் மயிலுக்கும் உள்ள பொருத்தம் யாரும் அறிந்தது. கதிர்காமத்துக்கும் மயிலுக்கும் உள்ள தொடர்பு தமிழ்ப் பாட்டிலே பதிவாகியிருப்பதை இந்தக் கவியைப் படித்தவர்களே உணர்ந்திருப்பார்கள்.



வெள்ளிக்கிழமை விடியற்காலையில் முனராகந்தாவை விட்டுப் புறப்பட்டோம். மலைவழியே கார் கீழே இறங்கியது. பிறகு சமவெளியில் அடர்ந்த

காட்டினூடே செல்லத் தொடங்கியது. எங்கள் கார் 50, 60, 70, 80 என்று வேகமாகப் பறந்தது. ஆனாலும் கதிர்காம வேலனைத் தரிசிக்கவேண்டும் என்று

9