பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

139

கிறது. மூன்று மூர்த்திகளோ, மூன்று சக்கரங்களோ அங்கே இருக்கின்றன என்று ஊகிக்கலாம். மூன்று உலகம் என்று சொல்கிறோம்; அவற்றைக் கண்டவர்கள் யார்? மூன்று மூர்த்திகள் என்று புராணம் பேசுகிறது; அவர்களைத் தரிசித்தவர்கள் யார்? கதிர்காமத்திலும் மூன்று தங்கக் கலசங்களைக் காணலாமேயன்றி, அவற்றால் குறிப்பிக்கப் பெறும் மூன்று தெய்விகப் பொருள்கள் இன்ன என்று யாரும் அறிந்திலர்.

இங்கே பூசை செய்கிறவர்கள், சிங்களவர்கள். அவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள். கப்புராளைமார் என்று அவர்களைச் சொல்கிறார்கள். பூசை செய்கையில் வாயைக் கட்டிக்கொண்டே செய்கிறார்கள். விபூதிப் பிரசாதம் கொடுக்கிறார்கள். பௌத்தர்களுக்குக் கதிர் காம முருகன் ஒரு காவல் தெய்வம். இங்கே கதிர்காம நாதன் சந்நிதியை அடுத்து ஒரு சிறிய ஓட்டு வில்லைக் குடில் இருக்கிறது. அதைப் பிள்ளையார் கோயில் என்கிறார்கள். கதிர்காமக் கடவுளைக் கத்தரகம தெய்யோ என்று சிங்களவர் வழங்குகின்றனர். தெய்வம் என்பதே தெய்யோ ஆயிற்று. கிராமம் என்பதே கம என்று மாறியது. கத்தர என்பது ஒரு மரத்தின் பெயராம்; கருங்காலி மரம் என்றும் சொல்வர். அந்த மரம் அடர்ந்த இடம் ஆதலின் கத்தரகம என்ற பெயர் வந்ததாம். நம்முடைய நாட்டிலும் சிறந்த தலங்களுக்கு மரங்களால் பெயர்கள் அமைந்திருப்பதை நாம் அறிவோம். சிதம்பரத்துக்குத் தில்லை என்ற பெயர் மரத்தினால் வந்ததுதான். மதுரைக்குக் கடம்பவனம் என்ற பெயர் உண்டு. திருவாலங்காடு, திருநெல்லிக்கா என்று மரங்களால் அமைந்த தலப்பெயர்கள் பல. இப்படியே கதிர்காமமும் மரத்தால் பெற்ற பெயரை