பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆசிரியரின் வேறு நூல்கள்

நாடோடி இலக்கியம்

ஏட்டில் எறாத பாடல்கள் எத்தனையோ நாட்டில் இருக்கின்ற மக்களிடையே வாழ்கின்றன. உழைப்பாளிகளின் அயர்வை போக்கும் பாடல்கள், தாலாட்டி, முத்தாட்டிச் சோறுட்டி நிலாக்காட்டும் பாடல்கள், காதலைக் குழைத்து ஊட்டும் இன்பப் பாடல்கள் இருக்கின்றன. தக்க நிலைக்களத்தில் காதல், வீரம், சோகம் முதலிய பல வேறு சுவைகளை வழங்கும் பாடல்கள் அமைந்தது. ரூ. 2-00

நவக்கிரகங்கள்

கலைமகளில் நவக் கிரகங்களைப்பற்றி வந்த விஷயங்களோடு இன்னும் பல அவசியமான செய்திகளையும் சேர்த்து, தியான சுலோகம், நவக்கிரக ஸ்தோத்திரம், நவக்கிரக கீர்த்தனங்கள் இவைகளோடு, தனித்தனிக் கிரகங்களுக்கு மூவர்ணப்படங்களும் நவக்கிரகம் சேரந்த வர்ணப்படம் ஒன்றும் கொண்ட பயன்மிக்க வெளியீடு. ஓவியம் - எஸ். ராஜம் அச்சில்

காவியமும் ஓவியமும்

தமிழ்க் காவியங்களின் அங்கங்கே குவிந்து கிடக்கும் மணிகள் போன்ற காட்சிகளைச் சொல்லோவியங்களாகச் சாணை பிடித்து, எல்லாத் தமிழரும் நன்கு ரஸிக்கவும், களிக்கவும் எழுதிய கட்டுரைகள். ஓவியர் ராஜத்தின் ஓவியங்கள் அந்தக் காட்சிகளைக் காட்டுகின்றன. இரண்டாம் பதிப்பு ரூ. 28-00


கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை-4




1268