12
இலங்கைக் காட்சிகள்
நுழைவுச் சீட்டு என்றும் சொல்லலாம். ஓர் ஊரிலிருந்து புறப்படும்போது பிரிவுபசாரம் பெற்றுக்கொள்கிறோம்; போகிற ஊரில் வரவேற்புக் கிடைக்கிறது. அந்தமாதிரி இந்த இரண்டு சீட்டுக்களையும் கொள்ளலாம். ஆனால் அந்த இரண்டும் நமக்குத் தொல்லையில்லாமல் நம் மனத்துக்குச் சந்தோஷத்தைத் தருபவை. இந்த இரண்டும்-?
வீஸாவுக்கு விண்ணப்பம் உள்நாட்டு இலாகாவின் காரியதரிசிக்கு அனுப்ப வேண்டும்.[1] பாஸ்போர்ட்டுக் கிடைத்துவிட்டால், பிறகு வீஸா பெறுவது சுலபம் என்று, எல்லாம் தெரிந்த அன்பர் ஒருவர் சொன்னர். ஆனால் பாஸ்போர்ட்டு வரவில்லை. ஆகஸ்டு மாதம் முப்பத்தோராந் தேதி சுயபுராண விசாரணை நாள். ஸெப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கண்டியில் தமிழ் விழா நடைபெறுவதாக இருந்தது. பிறகு அதை 16-ஆம் தேதிக்கு ஒத்திப் போட்டார்கள். பாஸ்போர்ட்டு வந்துவிடும், வந்துவிடும் என்று எதிர் பார்த்தேன். கடைசியில் கமிஷனர் காரியாலயத்துக்கு அன்பர் ஒருவரை அனுப்பி வாங்கிவரச் செய்தேன். 5-ஆம் தேதியே கையெழுத்தான அது அங்கே சொஸ்தமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. 11-ஆம் தேதி அதைப் பெற்றுக்கொண்டு வீஸாவுக்கு விண்ணப்பம் எழுதி அன்பர் ஒருவர் மூலம் அனுப்பினேன். தொழில் விவரம் குறிக்கும்போது 'பத்திரிகைக்காரன்’ என்று குறித்திருந்தேன். அது சங்கடமாக முடிந்தது. பத்திரிகைக்காரன் அரசியல் குழப்பத்துக்குக் காரணமானவன் என்ற நினைவோ, என்னவோ? "அந்தப் பேர்வழி
- ↑ இப்போது இலங்கைக்கு வீஸாக் கொடுக்க அவ்வரசாங்கத்தார் ஒரு காரியாலயமே வைத்திருக்கிறார்கள்