பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இலங்கைக் காட்சிகள்

ஆழத்தின் பேதத்தை நீலவண்ணத்தின் பேதங்களால் தேசபடத்தில் காட்டுவார்கள். அந்தப் படத்தில் காண்பதுபோலக் கடலின் தோற்றத்தைக் காணலாம். கரையை அடுத்த பகுதிகளில் வெளிறிய நீலமாகவும் வரவர நீலம் மிகுதியாகி நடு இடத்தில் கரு நீலமாகவும் காட்சி அளிக்கும்.

சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் கடற்கரை ஓரமாகவே பறந்து சென்றது. ஆறுகளும் குன்றுகளும் தெரிந்தனவேயொழிய இன்ன ஊர்ப் பக்கம் இது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. தெற்கே பறந்து சென்ற விமானம் ஓரிடத்தில் கிழக்கு நோக்கிப் பறந்தது. அதுதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போகக் கடலைத் தாண்டிச் சென்ற நிலை. ஐந்து நிமிஷத்தில் கடலைத் தாண்டிவிட்டது. விமானம். அப்போது எனக்கு மிகவும் வியப்பு உண்டாயிற்று. ஹநுமான் இந்தக் கடலைத் தாண்டிச் செல்ல எத்தனை பாடுபட்டார் என்ன என்ன சங்கடங்கள் அவருக்கு இடைவழியிலே உண்டாயின! இந்த விமானம் அஞ்சு நிமிஷத்திலே தாண்டிவிட்டதே!

விமானத்திலிருந்து இலங்கையின் மேற்குக் கடற்கரை புலனாயிற்று. இலங்கையின் தலைச்சொருக்குப்போல் படத்தில் தோன்றும் இடம் யாழ்ப்பாணம். 'ஏர் இந்தியா' விமானத்தில் இலங்கை செல்வதாக இருந்தால் திருச்சி சென்று அங்கிருந்து கொழும்பு செல்லவேண்டும். 'ஏர் சிலோன்' விமானமானால் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொழும்புக்குப் போகவேண்டும். நான் சென்றது 'ஏர் சிலோன்' விமானம். ஆதலால் யாழ்ப்பாணத்தில் அது இறங்