உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இலங்கைக் காட்சிகள்

உண்டா?" என்று கேட்டார். சொல் என்பதை நாம் சொல்வதுபோலச் சொல்லாமல் வல்லோசையுடன் உச்சரித்தார். முதலில் அவர் பேசினது விளங்கவில்லை. “என்ன?" என்று கேட்டேன். ஏதாவது செய்தி உண்டா?” என்று விளக்கினர். அவர் யாழ்ப் பாணக்காரர்.

சில நாட்களுக்கு முன்னே ஏதோ ஒரு குருட்டு யோசனையில் ஆழ்ந்திருந்தேன். நாம் பேசும் தமிழைப் பற்றி என் மனம் எண்ணமிட்டது. வல்லின எழுத்துக்கள் சொற்களின் முதலில் வரும்போது முழு வல்லினமாக, வன்மையாக உச்சரிக்கிறோம். மகன், தங்கம் என்ற இடங்களில் ககரம் முழு வல்லினமாக இல்லை. கல் என்னும்போது வன்மை ஒலியோடு ககரம் ஒலிக்கிறது. பண் என்றாலும், தந்தை என்றாலும் பகரத்தையும் தகரத்தையும் வல்லோசையோடு உச்சரிக்கிறோம். ஆனால் சகரத்தை மாத்திரம் மொழிக்கு முதலில் வரும் போது கௌசிகன் என்ற சொல்லில் வரும் வடமொழி எழுத்தாகிய சி என்பது போல உச்சரிக்கிறோம், சட்டி, சொன்னான், சொக்கன், சோலை, சிறுவன்-எல்லாவற்றிலுமே சகரம் வல்லோசை பெறுவதில்லை. வல்லினமாக உள்ள மற்றவற்றின் இயல்பு இந்தச் சகரத்துக்கு மாத்திரம் இல்லையே! முன்காலத்தில் அதையும் வல்லோசையுடன் உச்சரித்திருப்பார்கள் போலும்!- இவ்வாறு அன்று ஒலியாராய்ச்சியில் என் சிந்தனையை ஓடவிட்டேன்.

“ஏதாவதுச்சொல் உண்டா ?” என்று வீரகேசரியின் நிருபர் என்னைக் கேட்டபோது எனக்கு அது நினைவுக்கு வந்தது. சகரம் வல்லினமாக ஒலிப்பதை