பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3
கொழும்பு நூதன சாலை

நானும் உடன்வந்த நண்பரும் கொழும்பு தேசீயப் பொருட்காட்சிச் சாலைக்குள் புகுந்தபோதே எங்களுக்கு நல்ல சகுனம் உண்டாயிற்று. அந்தக் காட்சிச் சாலையில் உள்ள பொருள்களை வருவோருக்கு விளக்கிக் காட்டுவதற்காகச் சில அறிஞர்களை நியமித்திருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் திரு நா. சுப்பிரமணியம் என்பவர். அவர் எங்களைக் கண்டவுடன் தமிழ் நாட்டுக்காரர்கள் என்று தெரிந்துகொண்டார். அவர் இலங்கைத் தமிழர்.

இளைஞராகிய அவர் புன்முறுவலோடு எங்களை அணுகினார். என்னை இன்னாரென்று அவர் ஊகித்துக் கொண்டார். “இந்த நூதனசாலையில் உள்ள பொருள்களைப்பற்றிய விவரங்களைச் சொல்கிறேன்; அதற்காகவே நான் இங்கே இருக்கிறேன்" என்றார். இது நல்ல சகுனம் அல்லவா? அவர் ஒரு தமிழ் எழுத்தாளர். சிங்கள இலக்கியத்தில் பயிற்சி உள்ளவர். திருக்குறளைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

நூதன சாலை என்ற பெயர் எனக்கு நூதனமாக இருந்தது. மியூசியத்தைக் காட்சிச்சாலை, பொருட்காட்சிச் சாலை என்று இங்கே வழங்குகிறோம். அநேகமாக மியூசியங்களில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிவந்த பண்டங்களும், கண்