26
இலங்கைக் காட்சிகள்
டெடுத்த பொருள்களுமே இருக்கின்றன. எல்லாம் பழைய பொருள்கள். அவற்றை வைத்திருக்கும் சாலைக்கு நூதன சாலை என்ற பெயர் வழங்குவது வேடிக்கையாக இருந்தது. இந்தப் பொருள்களைப் பார்க்க வருகிறவர்கள். இவற்றைப் புதிதாகப் பார்க்கிறார்கள். பொருள்கள் பழையனவாக இருந்தாலும் பார்க்கிறவர்கள் புதுமைப் பொருள்களைப் பார்க்கிறது போலவே காண்கிறார்கள். அவர்கள் காணும் காட்சி புதுமையானது. காண்போருக்கு நூதனமாக இருப்பதனால் அந்தப் பெயர் வந்திருக்கலாம்.
எப்படியோ நூதன சாலையென்றால் மியூசியம் என்று இலங்கையில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். அதுதானே வேண்டும்? சொல்கிறவன் எந்தக் கருத்தோடு சொல்லைச் சொல்கிறானே, அந்தக் கருத்தைக் கேட்கிறவன் தெளிந்துகொண்டால் சொல் பயனுடையதாகிறது. இங்கே சென்னையில் உள்ள மியூசியத்துக்கு மிக மிக வேடிக்கையான பெயர் வழங்குகிறதை அன்பர்கள் அறிந்திருப்பார்கள். “செத்த காலேஜ்" என்று பாமர ஜனங்கள் வழங்குவதை எத்தனையோ முறை கேட்டிருக்கிறோம். 'பீபிள்ஸ் பார்க்'கை உயிர்க் காலேஜ் என்றும், பொருட்காட்சிச் சாலையைச் செத்த காலேஜ் என்றும் சொல்கிறார்கள். உயிர்க் காலேஜில் யானையும் ஒட்டகமும் ஒட்டைச் சிவிங்கியும் உயிருடன் நடமாடுகின்றன. செத்த காலேஜில் செத்துப் போன பிராணிகளே வைத்திருக்கிருர்கள். மியூசியத்தில் பாமர மக்களைக் கவர்கிற பகுதி இன்னதென்று இந்தப் பெயரே சொல்கிறது. சென்னை மியூசியத்தில் உள்ள அற்புதமான சிற்பங்களையோ மர வேலைப்பாடு-