கொழும்பு நூதனசாலை
27
களையோ பழையதுப்பாக்கி முதலியவைகளையோ அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லை. பிராணி வர்க்கங்கள் உள்ள பகுதியைத்தான் அவர்கள் அதிகமாகக் கண்டு ரஸித்திருக்க வேண்டும்.
கொழும்பு நூதனசாலை பார்க்கத்தக்க இடம். 'ராயல் ஏஷியாடிக் சொசைடி'யினர் முதல் முதலாக 1847-இல் ஒரு காட்சிச் சாலையைத் தொடங்கினார்கள். அதுவே நாளடைவில் வளர்ந்து பெருகிப் பெரிய மியூசியம் ஆகிவிட்டது. அவ்வப்போது கிடைத்த பொருள்களைத் தொகுத்து அங்கே பாதுகாக்கலானர்கள். இரண்டடுக்கு மாளிகைகளில் இன்று பல பொருள்கள் போற்றி வைக்கப்பெற்றிருக்கின்றன.
இரண்டாவது உலகப் போர் வந்தபோது மியூசியம் உள்ள இடத்தைக் காலி செய்தார்கள். காட்சிப் பொருள்களெல்லாம் பாதுகாவலில் இருந்தன. சண்டை முடிந்த பிறகு வெளிவந்திருக்கின்றன. இதனால் சில பொருள்கள் நிலைகுலைந்து போயினவாம்.
இப்போது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி என்ற நான்கு இடங்களில் காட்சிச்சாலைகள் இருக்கின்றன. தலைநகராகிய கொழும்பில் உள்ளது பெரிதென்று சொல்ல வேண்டியதில்லை. இங்கே பல பகுதிகள் உள்ளன. நான் அதிகமாகக் கவனித்துப் பார்த்தவை உலோக விக்கிரகங்கள், சிலா விக்கிரகங்கள், ஓவியங்கள் ஆகியவை உள்ள பகுதிகளே.
இலங்கையைப் பழங்காலத்தில் பல அரசர்கள் வெவ்வேறு இடங்களில் இராசதானியை அமைத்துக்