28
இலங்கைக் காட்சிகள்
கொண்டு ஆண்டார்கள். அவர்களுக்குள் கண்டியிலிருந்து ஆண்ட கடைசி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்பவன். அந்த அரசனுடைய தங்கச் சிங்காதனம் லண்டனில் இருந்தது. இலங்கை சுதந்தரம் பெற்ற பிறகு அந்தச் சிங்காதனம், கண்டி அரசனுடைய கிரீடம், செங்கோல், துப்பாக்கி முதலியவை மீட்டும் இலங்கைக்கே கிடைத்தன. அவற்றைக் கொழும்பு மியூசியத்தில் காணலாம். இந்தப் பொருட்காட்சிச் சாலைக்கு வருகிறவர்கள் யாரானாலும் இந்தச் சிங்காதனத்தைப் பாராமல் போவதே இல்லை.
விக்கிரகங்கள் உள்ள பகுதியில் மிகவும் சிறந்த வேலைப்பாடுள்ள நடராஜ விக்கிரகங்கள் சிலவற்றைப் பார்த்தேன். 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்' என்று திருநாவுக்கரசர் பாடினர். 'குமிண் சிரிப்பு' என்பது அவருடைய பாவனை என்று நினைப்பவர்கள் இங்கே உள்ள இரண்டொரு நடராஜத் திருவுருவங்களைக் காணவேண்டும். உண்மையாகவே அந்த மூர்த்திகளின் திருமுகங்களில் புன்முறுவல் குமிழ்ப்பதைக் காணலாம். அந்தப் புன்முறுவல் பூத்த திருமுகமண்டலத்தில் நம் விழியைச் செருகிவிட்டால் செம்பும் வெண்கலமும் என்றா தோன்றுகிறது? உலகத்தின் பூசல்களுக்கிடையே, வாழ்ந்தும் தாழ்ந்தும், இன்புற்றும் துன்புற்றும் வந்து வந்து செல்லும் மக்கட் கூட்டத்தின் முன் நடராஜப் பெருமான் என்றும் மாருத புன்னகையுடன், எதனாலும் வேறுபாடு அடையாத பொலிவுடன் நடனமாடிக் கொண்டிருக்கிருன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. முகத்தை வடித்த சிற்பி வாயை வடித்தான் இதழை வடித்தான்; அது பெரி-