பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொழும்பு நூதன சாலை

29

தல்ல;அதனிடையே புன்னகையை வடித்து வைத்தானே, அந்த அழகை என்னவென்று சொல்வது!

அழகிய சுந்தரமூர்த்தி நாயனரின் திருவுருவத்தைக் கண்டு சில கணம் நின்றேன். இன்னும் பல பல திருவுருவங்களைக் கண்டேன்.

சிலா விக்கிரகங்கள் உள்ள பகுதியில் எத்தனை புத்த விக்கிரகங்கள் உலோகத் திருவுருவத்திலும் அப்படியே உள்ளன. புத்தர் பிரான் நின்றும் இருந்தும் கிடந்தும் காட்சி தருகிற கோலங்களைக் கண்டேன். கொந்தளிக்கும் உலகில் அமைதியின் திருவுருவாக வீற்றிருக்கிறார் அவர். அலை கடல் துரும்புபோல மக்கள் அலைந்து பகலில் ஓய்வின்றி உழைத்தும், இரவில் உறக்கமின்றி உழன்றும், படுத்தால் கனவும் பல நினைவும் அமைதியைக் குலைக்கக் கிடந்தும் வாழும் காட்சிகளுக்கிடையே தம்மை மறந்த லயந்தன்னில்