பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொழும்பு நூதன சாலை

31

செய்திகளை ஒன்றோடு ஒன்று ஒட்டுப்போட்டுப் பார்ப்பது மனித இயல்பு. அப்படி என் மனத்திலும் சிறிது நேரம் இந்த ஆராய்ச்சி குடிகொண்டது. அதன் பயனாக இன்னும் சற்று நேரம் புத்தர்பிரான் திருமுன்னர் நின்று அவர் திருமேனியை நன்றாகக் கண்டு களிக்கும் வாய்ப்பு உண்டாயிற்று. அவருடைய அடிகளில் அழகிய தாமரை மலர் முத்திரைகளைக் கண்டேன்.

இலங்கையில் சிகிரியா, பொலன்னறுவை, தம்புல்லா முதலிய பல இடங்களில் குகைகளிலும் சுவர்களிலும் பல வண்ண ஒவியங்கள் இருக்கின்றன. அவற்றின் மாதிரிகளை இங்கே ஓவியப்பகுதியில் கண்டேன். புத்தருடைய ஜாதகக் கதைகளை வண்ண ஓவியமாகக் கண்டேன். சிலையிற் பொறித்த சிற்பத்திலும் பார்த்து மகிழ்ந்தேன்.

இந்தப் பொருட்காட்சிச் சாலையில் ஒரு புத்தக சாலையையும் வைத்திருக்கிறார்கள். நாம் இங்கே வாசக சாலை என்று சொல்வதை இலங்கையில் வாசிக சாலை என்று சொல்கிறார்கள். கொழும்புப் பொருட்காட்சியில் உள்ள 'வாசிகசாலை' 1870-ஆம் வருஷம் திறக்கப்பெற்றது. இங்கே பல துறைகளில் உள்ள புத்தகங்கள் எழுபதியிைரத்துக்கு மேல் இருக்கின்றன. 3500 ஓலைச் சுவடிகள் உள்ளன. வடமொழி, சிங்களம், பாளி, தமிழ் என்ற மொழிகளில் அமைந்த பல பழைய நூல்களை இந்தச் சுவடித் தொகுதிகளில் காணலாம். இலங்கையின் பழஞ்சரிதையைக் கூறும் இதிகாசம் ஒன்று உண்டு. அதற்கு மகாவம்சம் என்று பெயர் சொல்வார்கள். கல்வெட்டினாலும் பிற சான்றுகளாலும் சரித்திர வரலாற்றை அறிய முடிகிறது. அவற்றால்