உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

முதல் முதலாக நான் இலங்கைக்கு 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று 18 நாட்கள் தங்கினேன். தலாது ஒயாவில் உள்ள திரு கணேஷ் என்னும் அன்பர் கண்டித் தமிழ் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைத்தார். அதனல் சென்றேன். தமிழ் விழா நடைபெற்ற பிறகு கிட்டத்தட்ட ஆயிரம் மைல் என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார், அது முதல் அவர் எனக்குத் தம்பி ஆகிவிட்டார். அவருடைய அன்பே இலங்கைக் காட்சிகளைக் காணச் செய்தது.

பல இடங்களே நான் கண்டேன். அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய கட்டுரைகளேத் தொடர்ச்சியாகக் கலைமகளில் எழுதி வந்தேன். கதிர்காமம் சென்ற வரையிலும் எழுதினேன். அப்பால் எழுதவில்லை. கதிர்காமத்திலிருந்து கேரே கொழும்பு வந்து ஒரு நாள் தங்கினேன். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் இருந்தேன். அந்த ஒரு நாளில் பல இடங்களைப் பார்த்தேன்.

அந்த யாத்திரைக்குப் பின் மூன்று முறை இலங்கைக்குப் போய் வந்திருக்கிறேன். யாழ்ப்பாணப் பகுதிகளையும் அதைச் சார்ந்த தீவுகளையும் பார்த்தேன். யாழ்ப்பாணத்துக் கென்றே விரிந்த வரலாறு உண்டு. இலங்கையின் வடக்கே பல தீவுகள் சூழ அரசி போல இலங்குவது யாழ்ப்பாணம், தமிழ் மக்களே வாழ்ந்துவரும் பகுதி, தமிழ் மொழியையும் கலைகளையும் பாதுகாத்து விளங்கும் இடம். அங்கு வாழும் தமிழர்களுடைய தமிழன்பையும் சிவ பக்தியையும் யார் கண்டாலும் வியக்காமல், இருக்கமாட்டார்கள். தமிழ் காட்டில் உள்ள கோயில்களைப் போன்ற விரிவான அமைப்பையுடைய ஆலயங்கள் அங்கே இராவிட்டாலும் பல தலங்கள் இருக்கின்றன.