பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இலங்கை காட்சிகள்

கிறது. இப்போது தமிழ் நாட்டில் அந்த அழகைக் காண இயலாது. இதோ இருக்கிறது சங்க நூலில் கண்ட குறிஞ்சி நிலம். இதோ இருக்கிறது குறிஞ்சிக் கிழவனாகிய முருகனுடைய அழகுக் கோலம்!"

நான் சொற்பொழிவு ஆற்றவில்லை. உணர்ச்சி மிகுதியால் பேசினேன்.

பங்களாவைச் சிறிது சுற்றிப் பார்த்தேன். தேயிலைச் செடியைப் பார்த்தேன். சிறிய நந்தியாவட்டைச் செடியைப்போலக் குத்துக் குத்தாகத் தேயிலைச் செடிகள் இருந்தன. அந்தச் செடியை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கவாத்துச் செய்வார்களாம். அப்போதுதான் நல்ல கொழுந்தாக விடுமாம். கடல் மட்டத்துக்கு 3000 அடி உயரத்தில் தேயிலை வளர்கிறது. ஒரு செடி நாற்பது ஆண்டு வரையில் பலன் தரும். முன்பு இலங்கையில் அதிகமாகக் காபித் தோட்டங்களே இருந்தனவாம். இடையிலே ஒரு பூச்சி வந்து எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அதன் பிறகே தேயிலையை எங்கும் பயிரிட்டார்கள். இப்போது இலங்கைக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் பண்டங்களில் முக்கியமானது தேயிலை.

முன்பு இலங்கைத் தோட்டங்கள் யாவுமே வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இப்போது சிங்களவர்களும் தமிழர்களும் பல தோட்டங்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

இயற்கை வளம் மிக்க மலைகளில் தேயிலைத் தோட்டங்கள் கொழுந்திலே பொன்னை வைத்திருக்கின்றன. நான் தங்கியிருந்த கிரிமெட்டியாத் தோட்டம் 450 ஏகராப் பரப்புடையது. "கிரிமெட்டியா" என்றால்