பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இலங்கைக் காட்சிகள்

ஒன்று நெருங்கிச் செழித்திருந்தன. தென்ன மரங்கள் மிக உயரமாக வளர்ந்திருந்தன. அவற்றைவிடச் சற்றுத் தாழ்வாகக் கமுக மரங்கள் நின்றன. அவற்றையடுத்துப் பின்னும் தாழப் பலா மரங்கள் இருந்தன. படிப்படியாக அமைத்தாற்போல அவை விளங்கின. தென்ன மரத்திலிருந்து பழுத்து முதிர்ந்த ஒரு தேங்காய் விழுந்தது; அதற்கு அடுத்தபடி உயர்ந்து நின்ற கமுக மரத்தின்மேல் அது விழுந்தது. அந்த மரத்தில் வண்டுகள் பெரிய தேனடையை வைத்திருந்தன. தேங்காய் அந்தத் தேனடையின் மேல் வேகமாக விழுந்து அதைக் கிழித்துக்கொண்டு வந்தது. கமுக மரத்தின் கீழே பலா மரங்கள் இருந்தன. தேனடையைக் கிழித்து வந்த தேங்காய் பலா மரத்தின்மேல் விழுந்தது. அதில் பழங்கள் பழுத்துக் கனிந்திருந்தன. வேகமாக விழுந்த தேங்காய் அந்தப் பலாப் பழத்தைக் கீறியது; அதன் கீழ் நின்ற மாமரத் திலிருந்து கனிகளைச் சிதறியது; பின்பு அதன் கீழ் நின்ற வாழை மரத்தில் பழுத்திருந்த பழங்களை உதிர்த்துவிட்டது. தேங்காய் மேலிருந்து விழுந்து நடத்திய இந்தப் பயணத்தில் அந்த நாட்டின் தேனையும் பழத்தையும் சுவைத்தது. நில வளத்தை நாம் தெரிந்துகொள்ளும் அளவுகோலாக அந்தத் தேங்காய் உதவியது.

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீத்தேன் தொடைகீறீ வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதம்என்று இசையால் திசை போய துண்டே!

[காய்கள் சிறப்பாகக் காய்த்து நிற்கின்ற தென்ன மரத்தின் பழுத்த கெற்று உதிர, பின் அது கமுக