பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டி விழாக்கள்

57

"கதிர்காமத்தில் அல்லவா கதிர்காம வேலன் இருப்பான்? இங்கே-"

"ஆம்; இலங்கை முழுவதும் கதிரேசன் தான் இருக்கிறான். எந்த ஊரானாலும் முருகன் மாத்திரம் கதிர்வேற் பெருமான்; கதிர்காமப் பெருமான்" என்றார் ஓர் அன்பர்.

தமிழ் நாட்டில் தண்டாயுதபாணியின் கோயில் எங்கே இருந்தாலும் அவரைப் பழனி யாண்டவரென்றே சொல்கிறோம். பழனி - ஓரிடத்தில் தான் இருக்கிறது. ஆனால் பழனியாண்டவரோ வேறு பல ஊர்களிலும் இருக்கிறார். இது அப்போது என் ஞாபகத்துக்கு வந்தது.

“இங்கே ஒரு முருகன் திருக் கோயில் சிறப்பாக இருக்க வேண்டும். அருணகிரி நாதர் அப் பெருமானைப் பாடியிருக்கிறார்" என்றேன் நான்.

"சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன்என் றென் றுற் றுனை நாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ?
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்தில்அங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே!"

என்ற பாட்டையும் சொன்னேன்.

கண்டி நகர மண்டபத்தில் நகரமக்கள் பலர் கூடியிருந்தனர். கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். அரசாங்க மந்திரிகள் சிலரும் இலங்கைச் சட்ட சபை அங்கத்தினர் சில